VIDEO: ஹர்திக், பொல்லார்டு உடன் மோதிய பஞ்சாப் வீரர்!

#HardikPandya, #Pollard and #HardusViljoen square off on pitch during #MIvKXIP | பொல்லார்டின் (83) ருத்ரதாண்டவத்தால் மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. #MIvKXIP

news18
Updated: April 11, 2019, 1:53 PM IST
VIDEO: ஹர்திக், பொல்லார்டு உடன் மோதிய பஞ்சாப் வீரர்!
ஹர்திக், பொல்லார்டு உடன் மோதிய பஞ்சாப் வீரர்.
news18
Updated: April 11, 2019, 1:53 PM IST
போட்டியின்போது ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்டு உடன் பஞ்சாப் வீரர் மோதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 24-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி கே.எல்.ராகுல் (100). கிறிஸ் கெய்ல் (63) ஆகியோரின் அதிரடியால் 197 ரன்கள் குவித்தது.

அடுத்துக் களமிறங்கிய மும்பை அணி, பொல்லார்டின் (83) ருத்ரதாண்டவத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

mumbai indians, IPL
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி. (BCCI)


மும்பை அணியின் பேட்டிங்கின்போது, பஞ்சாப் அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டஸ் வில்ஜோன், ஹர்திக் பாண்டியாவுக்கு அருகில் வந்து முறைத்து பார்த்தார். பதிலுக்கு ஹர்திக் பாண்டியாவும் அப்படியே செய்தார்.



அதேபோல், சிறிது நேரத்துக்கு பிறகு, களமிறங்கிய பொல்லார்டின் ஜெர்சியை வில்ஜோன் பிடித்து இழுத்தார். அப்படியே அவரது தோளை தடவிக்கொடுத்தபடி சென்றார்.



இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...