மெல்போர்ன் டெஸ்டின் முதல் நாளில் ஹனுமா விஹாரியின் ஹெல்மெட்டை பவுன்சர் பந்து பலமாக தாக்கியதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று (டிச.26) காலை 5 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரியும், மயங் அகர்வாலும் களமிறங்கினர்.
ஹனுமா விஹாரி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங் அகர்வால் நிதானமாக விளையாடி அறிமுக டெஸ்ட் போட்டியில் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புஜாரா அரை சதம் அடிக்க முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி 47 ரன்களுடனும், புஜாரா 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
போட்டியின் 13-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆசுர வேகத்தில் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை ஹனுமா விஹாரி சரியாக கணிக்கவில்லை. பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. ஹனுமா விஹாரி சுதாரிப்புடன் இருந்தாலும், மற்ற வீரர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.
vihari_helmet_edit_0 from Mayank Agarwal on Vimeo.
அம்பயர் குறுக்கிட்டு ஹனுமா விஹாரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்தார். இந்திய அணியின் மருத்துவக் குழுவினரும் மைதானத்திற்கு உடனே வந்து சோதனை செய்தனர். ஆஸ்திரேலிய வீரர் பிளிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி இறந்த சம்பவம் கண்ணுல வந்து போகுமா இல்லையா?
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia 2018, Melbourne