Home /News /sports /

VIDEO | பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் கோலியைக் கட்டியணைத்த ரசிகர்!

VIDEO | பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் கோலியைக் கட்டியணைத்த ரசிகர்!

கோலியைக் கட்டியணைத்த ரசிகர். (Twitter)

கோலியைக் கட்டியணைத்த ரசிகர். (Twitter)

Fan breaches security to hug #ViratKohli during #RCBvKXIP game in #Mohali | பெங்களூரு அணி பேட்டிங் செய்தபோது, பாதுகாப்பை மீறி ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்தார்.

  • News18
  • Last Updated :
    தல தோனியைத் தொடர்ந்து விராட் கோலியை அருகில் பார்க்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் நுழையும் சம்பவம் நடந்துள்ளது.

    2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

    இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து நேர்த்தியாக விளையாடினார். கோலி (67) அரைசதம் கடந்து அவுட்டானார். டி வில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.

    Virat Kohli, RCB, IPL
    அரைசதம் அடித்த விராட் கோலி. (BCCI)


    இறுதியில், 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு, நடப்பு சீசனில் இதுவே முதல் வெற்றியாகும்.

    பெங்களூரு அணி பேட்டிங் செய்தபோது, பாதுகாப்பை மீறி ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்தார். பின்னர், அங்கு பேட்டிங் செய்துகொண்டிருந்த கேப்டன் விராட் கோலியைக் கட்டியணைத்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ரசிகரை மைதானத்துக்கு வெளியே அழைத்துச்சென்றனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



    தல தோனியைத் தொடர்ந்து விராட் கோலியை அருகில் பார்க்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் நுழைகின்றனர்.

    VIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ!

    விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

    தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்

    அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

    VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

    கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி


    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: Captain Virat Kohli, IPL 2019, RCB

    அடுத்த செய்தி