”ஏமாற்றுக்காரா” என்றழைத்த ரசிகரின் மூக்குடைத்த டேவிட் வார்னர்! - வீடியோ

இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மற்றும் வார்னரை மைதானத்தில் ஏமாற்றுக்கார என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Vijay R | news18-tamil
Updated: September 7, 2019, 3:49 PM IST
”ஏமாற்றுக்காரா” என்றழைத்த ரசிகரின் மூக்குடைத்த டேவிட் வார்னர்! - வீடியோ
டேவிட் வார்னர்
Vijay R | news18-tamil
Updated: September 7, 2019, 3:49 PM IST
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவிந்தது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடித்து இங்கிலாந்து பவுலர்களை துவம்சம் செய்துள்ளார்.

இங்கிலாந்து ரசிகர்கள், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மற்றும் வார்னரை மைதானத்தில் ஏமாற்றுக்கார் (cheater) என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது.


ஓராண்டு தடைக்கு பின்னர் அணிக்கு திரும்பிய இருவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். வார்னர் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தையும், ஸ்மித் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை துவம்சம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மான்செஸ்டர் மைதானத்தின் ஓய்வு அறையிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங் செய்ய களத்திற்கு வந்தனர். அப்போது வார்னர் வெளியே வரும்போது ரசிகர் ஒருவர் ஏமாற்றுக்கார் என்று அழைத்தார். இதற்கு சற்று கோபமடையாத வார்னர் அவரை பார்த்து உற்சகமாக இரண்டு கைகளையும் தூக்கி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.



'ஏமாற்றுக்காரா' என்று அழைத்த ரசிகரின் மூக்கை உடைக்கும் விதமாக வார்னரின் செயல் இருந்தது என்றே சொல்லலாம். அந்த ரசிகர் மீது அவர் எந்தவித கோபமின்றி சிரித்தபடியே அங்கிருந்து விடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மற்றவர்கள் ஆரவார கூச்சலிட்டு வார்னருக்கு தங்களது ஆதரவை மைதானத்தில் வெளிப்படுத்தனர்.

Also Watch : தோட்டத்தில் உள்ள செடிகள் கருகியதால் துப்பாக்கிச்சூடு...

First published: September 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...