#CSKvRR | பாக்ஸிங்கிலும் பட்டைய கிளப்பும் ‘சின்ன தல’ ரெய்னா!

#CSK's '#ChinnaThala' #SureshRaina tries his hands at #boxing | சொந்த மைதானத்தில் சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#CSKvRR | பாக்ஸிங்கிலும் பட்டைய கிளப்பும் ‘சின்ன தல’ ரெய்னா!
பாங்ஸிங் பயிற்சி செய்த ரெய்னா.
  • News18
  • Last Updated: March 29, 2019, 12:18 PM IST
  • Share this:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


CSK Team,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.(CSK)


வெற்றியுடன் தொடரை தொடங்கிய சென்னை அணி, தனது 2-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில், 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதனை அடுத்து, நாளை மறுநாள் (மார்ச் 31) சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
MS Dhoni, தோனி
வலைப்பயிற்சியில் எம்.எஸ்.தோனி. (CSK)


இதற்காக, சொந்த மைதானத்தில் சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியின் சின்ன தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!

Also Watch...



First published: March 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading