இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஏற்கனவே, முதல் இரு போட்டிகளையும் வென்ற இந்திய அணி வைட்வாஷ் வெற்றி வேண்டும் என்ற நோக்கில் களத்தில் இறங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தனர்.
ரோஹித் சர்மா 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ஹார்திக் பாண்டியாவின் வலுவான ஆட்டத்தால் இந்திய 50 ஓவர்களில் 385 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அந்த அணி வீரர் டெவோன் கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 138 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் செய்த போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கோபமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்செல் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் சிறப்பாக ஆடிவந்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தனர். 25 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நியூசிலாந்து 184 ரன்கள் குவித்திருந்தது.
அப்போது ஷர்துல் தாக்கூரை பந்து வீச ரோகித் சர்மா அழைத்தார்.ஓவரின் முதல் பந்திலேயே பவுன்சர் வீசி மிட்செலை அவுட்டாக்கினார் ஷர்துல். அடுத்ததாக டாம் லேதம் களமிறங்கிய நிலையில், அவரையும் அடுத்த பந்திலேயே அவுட்டாக்கி ஷர்துல் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டை வீழ்த்தி நியூசிலாந்து பேட்டிங்கை ஷர்துல் ஆட்டம் காண வைத்தாலும் அந்த ஓவரின் முடிவில் ரோகித் சர்மாவின் கோபத்திற்கு ஷர்துல் ஆளானார்.
— Anna 24GhanteChaukanna (@Anna24GhanteCh2) January 25, 2023
ஓவரின் கடைசி இரு பந்துகளில் டேவான் கான்வே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் கோபமடைந்த ரோகித் ஷர்துலை அழைத்து எதற்கு ஒரே மாதிரி ஷார்ட் பால்களாய் போடுகிறாய் என்று கத்தி திட்டினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இருப்பினும் ஷர்துல் தனது அடுத்து ஓவரிலேயே நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸின் விக்கெட்டை வீழ்த்தி அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தார். ஷர்துல் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் திருப்புமுனையாக இருந்ததால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India captain Rohit Sharma, Rohit sharma, Shardul thakur