Video: கோலியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் - பாக். வீரர் வேண்டுகோள்!
#BabarAzam urges people not to compare him with #ViratKohli | பாபர் அஸாம், சர்வதேச டி-20 அரங்கில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
news18
Updated: February 14, 2019, 3:10 PM IST
news18
Updated: February 14, 2019, 3:10 PM IST
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்னுடன் ஒப்பிடாதீர்கள் என ரசிகர்களுக்கு பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பாபர் அஸாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை முறியடித்தவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக அவர் வலம் வருகிறார். டெஸ்டில் மட்டுமல்லாமல் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளிலும் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அண்மையில், பாகிஸ்தான் அணியின் வளர்ந்து வரும் பேட்ஸ்மேன் பாபர் அஸாம் உடன் விராட் கோலியை ஒப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வந்தனர். 24 வயதான பாபர் அஸாம், பாகிஸ்தான் அணிக்காக 59 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2,462 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில், 8 சதங்கள் அடங்கும், இதே காலகட்டத்தில் விராட் கோலி, பாபர் அஸாமை விட 300 ரன்கள் குறைவாகவே அடித்திருந்தார். அத்துடன், சர்வதேச டி-20 அரங்கில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பாபர் அஸாம் பேசுகையில், “என்னை விராட் கோலியுடன் ரசிகர்கள் ஒப்பிடுவதாக கேள்விப்பட்டேன். அவர் என்னை விட மிகப்பெரிய வீரர்.நான் இப்போதுதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளேன். ஆனால், கோலி பல சாதனைகளை படைத்துவிட்டார். அவரைப் போல் நானும் ஒரு நாள் சாதனை படைப்பேன். அப்போது என்னை அவருடன் ஒப்பிடுங்கள்,” என்று கூறினார்.
அண்மையில், ஒரே ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளை வென்று விராட் கோலி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக தோனி பெயரில் பெவிலியன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
Also Watch...
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை முறியடித்தவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக அவர் வலம் வருகிறார். டெஸ்டில் மட்டுமல்லாமல் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளிலும் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (BCCI)
அண்மையில், பாகிஸ்தான் அணியின் வளர்ந்து வரும் பேட்ஸ்மேன் பாபர் அஸாம் உடன் விராட் கோலியை ஒப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வந்தனர். 24 வயதான பாபர் அஸாம், பாகிஸ்தான் அணிக்காக 59 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2,462 ரன்கள் எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம். (ICC)
இதில், 8 சதங்கள் அடங்கும், இதே காலகட்டத்தில் விராட் கோலி, பாபர் அஸாமை விட 300 ரன்கள் குறைவாகவே அடித்திருந்தார். அத்துடன், சர்வதேச டி-20 அரங்கில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பாபர் அஸாம் பேசுகையில், “என்னை விராட் கோலியுடன் ரசிகர்கள் ஒப்பிடுவதாக கேள்விப்பட்டேன். அவர் என்னை விட மிகப்பெரிய வீரர்.
Loading...
Don't Compare Me With @imVkohli He Is Much Bigger Batsman Than Me & Got Several World Records ..Said @babarazam258 in @KarachiKingsARY Program pic.twitter.com/GyyID80rzB
— KHIZAR AZAM (@KHIZARAZAM) February 10, 2019
அண்மையில், ஒரே ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளை வென்று விராட் கோலி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக தோனி பெயரில் பெவிலியன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
Also Watch...
Loading...