Video: அடேங்கப்பா... ஒரே பந்தில் 17 ரன்களை வாரி அள்ளிக்கொடுத்த ஆஸி. பவுலர்!

Australian pacer #RileyMeredith concedes 17 runs from one | ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #BBL2019

news18
Updated: February 8, 2019, 7:55 PM IST
Video: அடேங்கப்பா... ஒரே பந்தில் 17 ரன்களை வாரி அள்ளிக்கொடுத்த ஆஸி. பவுலர்!
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் பந்துவீச்சாளர் ரைலி மெரெடித். (Video Grab)
news18
Updated: February 8, 2019, 7:55 PM IST
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர், ஒரு பந்து வீசுவதற்கு 17 ரன்களை வாரி அள்ளிக்கொடுத்த பரிதாபமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.

ஐ.பி.எல் டி-20 லீக் கிரிக்கெட் தொடரைப் போல், ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில், நேற்று நடந்த 52-வது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும், மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

Hobart Hurricanes Team, ஹரிகேன்ஸ் அணி
மைதானத்துக்குள் இறங்கும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி. (BBL)


இதனை அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 16 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றிபெற்றது.

Hobart Hurricanes Team, ஹரிகேன்ஸ் அணி
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஹரிகேன்ஸ் அணி வீரர்கள். (BBL)


போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, முதல் ஓவரை எதிரணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரைலி மெரெடித் வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்குள் 17 ரன்களை வாரிக்கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.



NB, Wide(4), NB(4), NB(4), 1 என ஒரு பந்தை வீசுவதற்குள் இவ்வளவு ரன்கள் கொடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. அவர் பந்து வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#NZvINDT20: 2-வது போட்டியில் ரோகித் சர்மா உலக சாதனை!

Also Watch...

First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626