7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய விராட் கோலி! வியந்து நின்ற அனுஷ்கா சர்மா - வீடியோ

அனுஷ்கா சர்மாவுடன் சென்று கொண்டிருந்த விராட் கோலியிடம் சிறுவன் ஒருவர் என்னுடைய ஆட்டோகிராப் உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டுள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 3, 2019, 8:56 PM IST
7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய விராட் கோலி! வியந்து நின்ற அனுஷ்கா சர்மா - வீடியோ
சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய கோலி
Vijay R | news18-tamil
Updated: September 3, 2019, 8:56 PM IST
ஜமைக்காவில் 7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கும் விராட் கோலியை பார்த்து அனுஷ்கா சர்மா சிரித்து கொண்டே இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெற்றி நாயகனாக வலம் வருகிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விராட் கோலிக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் உள்ளது.

விராட் கோலியிடம் ஆட்டோகிராப் வாங்க பலர் ஆர்வம்காட்டி வர, 7 வயது சிறுவனின் ஆட்டோகிராப்பை தனாக முன்வந்து வாங்கி சென்றுள்ளார் கோலி. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது.


அப்போது அனுஷ்கா சர்மாவுடன் சென்று கொண்டிருந்த விராட் கோலியிடம் சிறுவன் ஒருவர் என்னுடைய ஆட்டோகிராப் உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டுள்ளார். உடனே அந்த சிறுவனின் ஆட்டோகிராப்பை அவரிடமிருந்து பெற்ற பின்பே விராட் கோலி அங்கிருந்து சென்றார். கோலியின் இந்த செயலை சிரித்தபடியே அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரசித்து கொண்டிருந்தார்.சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய கோலியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிகவெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

Also Watch

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...