ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா வித்தியாசமான முறையில் பரிதாபமாக அவுட்டாகி வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.
12-வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் (குவாலிஃபையர் 1) மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனை அடுத்து, விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
Keemo Paul ends the tension!@DelhiCapitals win the #Eliminator by 2 wickets and move on to Qualifier 2 🔵#DCvSRH pic.twitter.com/WzpjUeg5pC
— IndianPremierLeague (@IPL) May 8, 2019
கடைசி ஓவரின் 4-வது பந்தில் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா பந்தை அடிக்காமல் ரன் எடுக்க முயற்சித்தார். அவரை பந்துவீச்சாளர் கலீல் அகமது ரன் அவுட் செய்தார். அப்போது, ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க ஸ்டம்பை மறைத்துக்கொண்டு மிஸ்ரா ஓடினார். இதுகுறித்து ஹைதராபாத் அணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ரீப்ளேவை முழுமையாக பார்த்த 3-வது நடுவர்கள், அமித் மிஸ்ரா ரன் அவுட் என அறிவித்தனர். இதனால், அதிசயமான முறையில் மிஸ்ரா அவுட்டாகி வெளியேறினார்.
இதற்கு முன்னர், ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாக 2013-ல் ராஞ்சியில் நடந்த போட்டியில் யூசுப் பதான் இதேபோல் அவுட்டாகினார். இவருக்கு அடுத்து இப்படி அவுட்டானது அமித் மிஸ்ராதான்.
இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஏன் இல்லை? பாலிவுட் நடிகர் கேள்வி!
Also Watch...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.