2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 92 ஆல் அவுட் ஆனபோது, இந்திய அணியை கிண்டல் செய்திருந்தார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இப்போது மெல்போர்னில் 68 ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து, இதற்கு மைக்கேல் வானைப் பழித்தீர்த்தார் வாசிம் ஜாஃபர்.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 82 ரன்கள் முன்னிலையை கூட கடக்க முடியாமல் 68 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து 14 ரன்களில் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இதை மைக்கேல் வானை கிண்டல் செய்வதற்கு ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் இந்திய முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர்.
கடந்த 2019ல் நியூசிலாந்து பயணம் மேற்கொண்ட போது, ஹாமில்டன் ஒருநாள் போட்டியில் 92 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. '100 ரன்களுக்குள் எந்த அணியாவது ஆல் அவுட் ஆகுமா' என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அப்போது கிண்டல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஆஷஸ் 'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டியில், 68 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆகி தொடரை இழந்தது. முந்தைய சம்பவத்துக்கு பழி தீர்க்கும் விதமாக, இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், வாகனை கிண்டல் செய்து வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
மைக்கேல் வானை கிண்டல் செய்து வாசிம் ஜாஃபர் வெளியிட்ட வீடியோ:
இங்கிலாந்து மிக மோசமாக ஆடியது, பூர்வக்குடி வீரர், ஆஸ்திரேலிய ஒரிஜினல் மண்ணின் மைந்தன் ஸ்காட் போலண்ட் 4 ஓவர் 7 ரன்கள் 6 விக்கெட் என்று வரலாறு படைத்தார்.
Also Read: ஷமி 200, ரிஷப் பண்ட் 101 நாட் அவுட், இங்கிடி அபாரம்- முதல் டெஸ்ட்டில் இந்தியா ஆதிக்கம்
இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு படுமோசமான ஆண்டாக அமைந்தது. 9 தோல்விகள் என்ற எதிர்மறைச் சாதனையை நிகழ்த்தியதோடு, மொத்தம் 54 டக்குகளை இங்கிலாந்து பதிவு செய்துள்ள எதிர்மறை சாகசத்தையும் நிகழ்த்தியது. மெல்போர்னில் நேற்று 4 இங்கிலாந்து வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
Also Read: Ashes 3rd test: 2021-ம் ஆண்டில் 54 டக்குகள்- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘சாகசம்’!
இந்நிலையில்தான் 68 ஆல் அவுட் ஆனதை வாசிம் ஜாஃபார் கிண்டலடித்துள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.