ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்’ – வாசிம் ஜாபர் நம்பிக்கை

‘இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்’ – வாசிம் ஜாபர் நம்பிக்கை

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

நடப்பாண்டில் 10 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற சஞ்சு சாம்சன் 284 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 71 ரன்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியில் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடர் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்தியா வரும் இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் பங்கேற்பதில் சந்தேகம்…

வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இந்தியா பங்கேற்கும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்குகிறது. இதில் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று நம்புகிறேன். தொடர்ச்சியாக அவர் அதிக ரன்களை குவிப்பார் என்றும் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இலங்கைத் தொடரை முடித்துக் கொண்டு இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டித் தொடர் ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

கேமரூன் க்ரீன் வேகத்தில் சுருண்டது தென்னாப்பிரிக்கா… 189 ரன்களுக்கு ஆல் அவுட்

நடப்பாண்டில் 10 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற சஞ்சு சாம்சன் 284 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 71 ரன்கள். இதேபோன்று 6 டி20 போட்டிகளில் பங்கேற்று அவர் 179 ரன்களை எடுத்திருக்கிறார். சராசரி 44.75.

டி20 போட்களில் சஞ்சு சாம்சனின் ஸ்ட்ரைக் ரேட் 158.40 ஆக உள்ளது. இந்திய அணியின் முழு நேர விக்கெட் கீப்பரை பொருத்தளவில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரிடையே ஆரோக்யமான போட்டி காணப்படுகிறது.

First published:

Tags: Cricket