களத்திலும் வெளியிலும் இங்கிலாந்து விக்கெட்டுகளைச் சாய்க்கும் அஸ்வின்: வாசிம் ஜாஃபரின் ட்வீட்

களத்திலும் வெளியிலும் இங்கிலாந்து விக்கெட்டுகளைச் சாய்க்கும் அஸ்வின்: வாசிம் ஜாஃபரின் ட்வீட்

அஸ்வின்

இந்த உரையாடல் வீடியோவை பதிவிட்ட வாசிம் ஜாஃபர் அதனுடன் தலைப்பு வாசகமாக, “களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இங்கிலிஷ் விக்கெட்டுகளைச் சாய்க்கும் அஸ்வின்” என்று புகழ்ச்சியா, அல்லது விமர்சனமா என்று தெரியாத ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார் வாசிம் ஜாஃபர்.

  • Share this:
    அகமதாபாத்தின் மோசமான பிட்சுக்கு முட்டுக் கொடுத்து அஸ்வின் மெய்நிகர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். நல்ல பிட்ச் என்றால் என்ன என்று கேட்டார், யார் அதற்கு விளக்கம் கொடுப்பது என்று பிரிட்டிஷ் பத்திரிகையாளருக்கு கேள்வி எழுப்பினார்.

    அகமாதாபாத் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிந்து போனது, நேர்நேர்தேமா பவுலர் அக்சர் படேல் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அவர்பந்துகள் திரும்பும் என்று நினைத்து இங்கிலாந்து வீரர்கள் ஏமாந்தனர். ஓரிரு பந்துகள் அவரையும் அறியாமல் குழிப்பிட்சில் திரும்பிவிட அதை இங்கிலாந்து வீரர்கள் நிரந்தரமானதென்று கருதி ஆடினர், ஆனால் மற்ற பந்துகள் திரும்பவில்லை நேராக வந்து முழங்காலுக்குக் கீழ் சென்று எல்.பி. அல்லது பவுல்டு ஆக்கியது.

    பிட்ச் குறித்த கேள்விகளை நேர்மையாக எதிர்கொள்ளாமல் அல்லது குறைந்தது அது பற்றி பேசாமல் இருப்பதன் மூலம் நாகரீகத்தைக் காக்க முயலாமல் எதிர்க்கேள்வி கேட்டு இன்னும் விமர்சனங்களையே எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.



    முன்னாள் வீரர்கள் பலர், கிரிக்கெட்டின் அடிப்படை அறத்துடன் ஆடியவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவற்றை அஸ்வின் நேர்மறையாக எதிர்கொள்வதுதான் முறை.

    இந்நிலையில் பிரிட்டன் பத்திரிகையாளர் ஒருவர் இது டெஸ்ட் பிட்சா என்று கேள்வி எழுப்ப 2 நாட்களுக்குள் டெஸ்ட் முடிந்த குற்ற உணர்வில் அஸ்வின் அவரிடம் பொரிந்து தள்ளினார், “சரி நல்ல பிட்ச் என்பது எது? நல்ல கிரிக்கெட் பிட்ச் என்றால் என்ன? என்றார் அஸ்வின்.

    அதற்கு பிரிட்டன் பத்திரிகையாளர், கேள்வி கேட்டது நான் ... பேட்டுக்கும் பந்துக்கும் நடந்த போட்டியா அது என்றார். அதற்கு அஸ்வின் மீண்டும், ‘நல்ல பிட்ச் என்பதை விளக்குபவர் யார்? யார் இதற்கு விதிமுறைகள் வகுத்துள்ளனர். இது நல்ல பிட்சா என்று நீங்கள் கேட்கிறீர்கள், எந்த ஒரு இங்கிலாந்து வீரரும் இப்படி கேட்கவில்லையே?அவர்கள் மேம்பட விரும்புகின்றனர். அவர்கள் சவாலை எதிர்நோக்குகின்றனர், நாங்கள் எந்த டூரிலும் பிட்ச் பற்றி பேசவில்லையே” என்று அஸ்வின் கூறினார்.

    இந்த உரையாடல் வீடியோவை பதிவிட்ட வாசிம் ஜாஃபர் அதனுடன் தலைப்பு வாசகமாக, “களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இங்கிலிஷ் விக்கெட்டுகளைச் சாய்க்கும் அஸ்வின்” என்று புகழ்ச்சியா, அல்லது விமர்சனமா என்று தெரியாத ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார் வாசிம் ஜாஃபர்.
    Published by:Muthukumar
    First published: