இந்திய வீரரை பேட்டிங் ஆலோசகராக நியமித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Vijay R | news18
Updated: July 16, 2019, 8:34 PM IST
இந்திய வீரரை பேட்டிங் ஆலோசகராக நியமித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
வலைப்பயிற்சியில் வாசிம் ஜாபர்
Vijay R | news18
Updated: July 16, 2019, 8:34 PM IST
உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணி லீக் சுற்றுகளோடு வெளியேறியதால் அந்த அணியின் கிரிக்கெட் வாரியம் பல அதிரடி முடிவுகளை எடுத்துளள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் வங்கசேத அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தைப் பெற்று லீக் சுற்றுகளோடு வெளியேறியது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததால் அந்த அணி மீது விமர்சனம் எழுந்தது.

இதனையடுத்து வங்கதேச அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சம்பகா ரமனாயகே ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


Also Read :சச்சின் வெளியிட்ட உலக லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள்...! தோனிக்கு இடமில்லை

வாசிம் ஜாபர்


இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 41 வயதான வாசிம் ஜாபர் ரஞ்சி கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் இவரே முதலிடத்தில் இருக்கிறார்.

Loading...

Also Read : உலகக்கோப்பை இறுதி போட்டி 'ஓவர் த்ரோ' சர்ச்சைக்கு இறுதியாக விளக்கமளித்தது ஐசிசி!

Also Watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...