உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா: வாசிம் அக்ரம் புகழாரம்

#WasimAkram praises #JaspritBumrah | சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் உள்ளார். #AUSvIND

உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா: வாசிம் அக்ரம் புகழாரம்
வாசிம் அக்ரம் மற்றும் பும்ரா.
  • News18
  • Last Updated: January 20, 2019, 8:13 PM IST
  • Share this:
இந்திய கிரிகெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிகெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த வீரராக வலம் வருகிறார். அண்மையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

Bumrah, பும்ரா
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பும்ரா. (BCCI)மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அசத்தினார். அத்துடன், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட், யார்க்கர் மன்னன் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.

உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அத்துடன், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்தும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Bumrah, பும்ரா
அறிமுக ஆண்டிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவை பாராட்டும் இந்திய வீரர்கள். (Twitter)


Loading...

இந்நிலையில், பும்ரா சிறந்த யார்க்கர் பவுலர் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார். “சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்களில், யார்க்கர் வீசுவதில் பும்ரா கைதேர்ந்தவர். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட வித்தியாசமான முறையில் பந்துவீசும் அவர், பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவராக இருக்கிறார்” என்று அவர் கூறினார்.

Wasim Akram, வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். (AFP)


மேலும், “நடப்பாண்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பும்ராவின் கடைசி கட்ட பந்துவீச்சு போட்டியின் முடிவுகளால் பெரிய தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்” என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.

கோலியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா!

Also Watch...

First published: January 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com