• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாகிஸ்தான் அணிக்கு நான் கோச்சிங் கொடுக்காதததுக்கு காரணம் இது தான் - ரகசியத்தை வெளியிட்ட அக்ரம் 

பாகிஸ்தான் அணிக்கு நான் கோச்சிங் கொடுக்காதததுக்கு காரணம் இது தான் - ரகசியத்தை வெளியிட்ட அக்ரம் 

wasim-akram

wasim-akram

வசிம் அக்ரம் ஒரு முறை கூட பாகிஸ்தான் தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தது கிடையாது.

  • Share this:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தான் ஏன் பயிற்சியாளராக ஒரு முறை கூட இருக்கவில்லை என்பதற்கான காரணத்தை வாசிம் அக்ரம் மனம் திறந்து வெளியிட்டுள்ளார்.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கும் சூழலில் கடந்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மிஸ்பா உல் ஹக்கும், பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஸ்பின்னர் வக்கார் யூனிஸும் பதவியிலிருந்து விலகினார்கள். அவர்களுக்கு பதிலாக சக்லைன் முஷ்டாக் தலைமை பயிற்சியாளராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஆல் ரவுண்டரான அப்துல் ரசாக்கும் இடைக்கால பயிற்சியாளர்களால பணியினை துவக்கி உள்ளனர்.

இந்த சூழலில் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவானான வசிம் அக்ரம், கிரிக்கெட் பாகிஸ்தான் என்ற ஊடகத்தின் ‘கிரிக்கெட் கார்னர்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிரிக்கெட் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அக்ரம் 1992ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற பாகிஸ்தான் அணியின் வீரராகவும், 1999ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.

வசிம் அக்ரம், ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சப்போர்ட் ஸ்டாஃப் ஆகவும், பிஎஸ்எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பல்வேறு அணிகளில் பணியாற்றியிருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட பாகிஸ்தான் தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தது கிடையாது. ஏன் தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தது கிடையாது என கேட்டதற்கு, என்னால் முழு நேரமும் பயிற்சியாளருக்கான நேரத்தை செலவிட முடியாது என்றார்.

Also Read: தைவானுக்குள் நுழைந்த 30க்கும் மேற்பட்ட சீன ராணுவ விமானங்கள்.. 2வது நாளாக பதற்றம்!

அவர் கூறுகையில், “நீங்கள் கோச்சாக இருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு 200 முதல் 250 நாட்களை அணிக்காக செலவிட வேண்டும், இது எனக்கு ஒத்துவராது. என்னால் என் குடும்பத்தை பிரிந்து அத்தனை நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல நேரிடும். இதுவே பிஎஸ்எல் வீரர்களுடன் என்றால் உள்ளூரிலேயே இருக்கலாம். பிஎஸ்எல் வீரர்கள் கூட அவ்வப்போது கால் செய்து ஆலோசனைகள் கேட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் ஒழுங்கீனம்:

அதே நேரத்தில் ரசிகர்களின் ஒழுங்கீன செயல்களினாலும் தான் தேசிய அணிக்கு பயிற்சியாளராகததற்கு முக்கிய காரணமாக வசிம் அக்ரம் முன்வைத்தார்.

Also Read:   பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை – சிக்கிம் அரசின் முன்மாதிரி நடவடிக்கை!

அவர் கூறுகையில், “நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. சமூக வலைத்தளங்களில் பயிற்சியாளர்களையும், மூத்த வீரர்களையும் ரசிகர்கள் எப்படியெல்லாம் வசைபாடுகிறார்கள் என பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். பயிற்சியாளர் விளையாடுவது கிடையாது, வீரர்கள் தான் விளையாடுகிறார்கள். பயிற்சியாளர்கள் ஆலோசனைகளையும், திட்டங்களையும் தான் வகுத்துத் தருகிறார்கள். அணி தோல்வியடைந்தால் பயிற்சியாளரை குற்றம் சொல்வது சரியானது அல்ல” இவ்வாறு வசிம் அக்ரம் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: