முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வருவார்…’ – வாஷிங்டன் சுந்தருக்கு குவியும் பாராட்டு

‘மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வருவார்…’ – வாஷிங்டன் சுந்தருக்கு குவியும் பாராட்டு

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர்

பேட்டிங்கின்போது முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க, வெறும் 25 பந்துகளில் வாஷிங்டன் சுந்தர் அரைச் சதம் அடித்து அசத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா உள்ளிட்டோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் எதிரணி வீரர்களை வாஷிங்டன் சுந்தர் திணறடித்தார். 4 ஓவர்களை வீசிய அவர் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன், பேட்ஸ்மேன் சாப்மன் ஆகிய விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தம் 22 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தது கிரிக்கெட் வர்ணனையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

பேட்டிங்கின்போது முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க, வெறும் 25 பந்துகளில் வாஷிங்டன் சுந்தர் அரைச் சதம் அடித்து அசத்தினார். இதனால் இன்று நடைபெறவுள்ள 2ஆவது முக்கியமான ஆட்டத்திலும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான வாசிம் ஜாபர் கூறியதாவது- வாஷிங்டன் சுந்தரின் ஆடிய விதம் அற்புதமாக இருந்தது. இதுகுறித்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்திய அணியின் சொத்தாக வாஷிங்டன் சுந்தர் இருப்பார் என்பதை அவரது ஆட்டம் தெரியப்படுத்துகிறது. குறிப்பாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் நல்ல திறமையை வெளிப்படுத்துவார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அவர் இருப்பார்.

சர்வதேச போட்டிகளில் அதிக திறமை கொண்டவர்களாக இந்திய இளம் அணி இல்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் விளையாடியது உதவிகரமாக இருக்கும். சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகள் விழுந்த பின்னர் நமது நம்பிக்கை தகர்ந்து விட்டது. இந்தியா இன்று சிறப்பான கம் பேக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முதல் டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் 2ஆவது போட்டி இன்றிரவு 7 மணிக்கு லக்னோ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

First published:

Tags: Cricket