முகப்பு /செய்தி /விளையாட்டு / சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டி விளையாட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர்

சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டி விளையாட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர்

நடராஜன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் இந்திய அணிக்காக விளையாடியது எனக்கு மிகவும் பெருமையா இருக்கின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலிய அணி பிரிஸ்பேனில் இதுவரை தோல்வியடைந்ததே கிடையாது. அப்படிபட்ட பலம் வாய்ந்த அணியை வீழ்த்துவதற்கு நாங்கள் நிறைய பயிற்சி மேற்கொண்டோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியூஸ் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என எதிர்பார்த்தீர்களா?

என்னுடைய முழு திறமையையும் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன். தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டேன் கடவுள் கொடுத்த பரிசாகவே இதை பார்க்கிறேன் என்றார்.

முதல் இன்னிங்ஸில் ஷர்த்துல் தாக்கூருடன் ஜோடி சேர்ந்து 123 ரன்கள் சேர்த்த அனுபவம் எப்படி இருந்தது?

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் விளையாடினோம். அவருடன் இணைந்து இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நடராஜன் -வாஷிங்டன் சுந்தர் இருவரும் இணைந்து டெஸ்ட் போட்டியில் அறிமுகம். அவருக்குக் உங்களுக்குமான பழக்கம் எப்படி?

நடராஜன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் இந்திய அணிக்காக விளையாடியது எனக்கு மிகவும் பெருமையா இருக்கின்றது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனது மகிழ்ச்சி. சக வீரர்கள் நிறைய ஊக்கம் அளித்தார்கள். வீரர்களுடன் ட்ரெஸிங் ரூம் அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவே அமைந்தது. இன்னும் நிறைய போட்டியில் விளையாட வேண்டும்.

மேலும் படிக்க... 'நாம ஜெயிச்சிட்டோம், நாம ஜெயிச்சிட்டோம்' : இந்திய வெற்றியை கவாஸ்கரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாடிய பிரையன் லாரா

சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டி விளையாட வேண்டும் என்பது என் கனவு. சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.

First published:

Tags: Cricketer natarajan, Washington Sundar