எல்லா போகஸும் நடராஜன் மேல தான்: வாஷிங்டன் சுந்தரின் இந்த அரிய சாதனையை கவனிச்சீங்களா?

144 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரும் அடித்திருக்கிறார்.

144 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரும் அடித்திருக்கிறார்.

  • Share this:
ஆஸ்திரேலிய தொடர் ழுழுவதுமே தமிழக வீரர் நடராஜன் பற்றிய பேச்சாகவே அமைந்துவிட்டது. அதே நேரத்தில் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி தனித்துவமான சாதனையை படைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி 20, ஒரு நாள் தொடர்களையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டி தமிழர்களுக்கு மறக்க முடியாத போட்டியாகத்தான் இருக்கும். ஏனெனில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் இந்த போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜா, மற்றொரு தமிழரான அஸ்வின், பும்ரா, ஹனுமா விஹாரி ஆகியோர் காயமடைந்த நிலையில் அணியில் களமிறங்கும் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றாலும் அவர்கள் இருவருமே தங்களின் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டனர் என்று தான் சொல்லியாக வேண்டும்..ஆம், நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஒரு படி கூடுதலாக சென்று, இப்போட்டியில் அரைசதமும் அடித்துள்ளார். 144 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரும் அடித்திருக்கிறார்.இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரை சதமும் 3 விக்கெட்களும் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3வதாக சேர்ந்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.இதற்கு முன்னதாக இச்சாதனையை தட்டு பட்கர் (1947ம் ஆண்டு) மற்றும் ஹனுமா விகாரி (2018ம் ஆண்டு) ஆகியோர் செய்திருக்கின்றனர். மூவருமே இச்சாதனையை தங்களின் முதல் இன்னிங்சில் செய்திருக்கின்றனர் என்பது சிறப்பு..
Published by:Arun
First published: