முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘தீரன்’ வாஷிங்டன் சுந்தர் 85 நாட் அவுட்: இந்தியா 337; பாலோ ஆன் கொடுக்காத இங்கிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது

‘தீரன்’ வாஷிங்டன் சுந்தர் 85 நாட் அவுட்: இந்தியா 337; பாலோ ஆன் கொடுக்காத இங்கிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது

அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.

அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.

மொத்தம் 138 பந்துகளைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு ஆட்டம் காட்டினார். சதம் எடுத்திருந்தால் சொந்த மண்ணில் சதம் என்ற ஒரு அரிய சந்தோஷம் கிடைத்திருக்கும், அதற்குள் பும்ரா அவுட் ஆனதால் இந்தியா 337 ரன்களுக்குச் சுருண்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் உள்ளது, சொந்த மண்ணில் ‘தீரன்’ வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அஸ்வினும் வாஷிங்டன் சுந்தரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்காக 80 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

இதனையடுத்து 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து பந்துகள் திரும்பி எழும்பும் பிட்சில் பாலோ ஆன் கொடுக்காமல் பயந்து போய் மீண்டும் பேட் செய்தது, ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ஸ்பின் ஆன பந்துக்கு எட்ஜ் ஆகி ரஹானேவின் கேட்சுக்கு வெளியேறினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 1/1 என்று உள்ளது,

ஷாபாஸ் நதீம் பந்துகளும் திரும்பி எழும்புகின்றன, ஆகவே இங்கிலாந்துக்கு பெரும் சவால் காத்திருக்கிறது, இந்திய அணி படு ஆக்ரோஷமாக களவியூகம் அமைத்து சவாலை ஏற்படுத்தி வருகிறது.

இன்று காலை 257/6 என்று தொடங்கிய இந்திய அணி மேலும் 80 ரன்களைச் சேர்த்தது, இதில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே தன் பங்குக்கு 52 ரன்களை எடுத்தார்.

ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடிய அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனை நேராக ஒரு சிக்சரையும் ஸ்பின்னரை இன்னொரு சிக்சரையும் விளாசி மிக அருமையாக ஒரு சதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பும்ரா எதிர்முனையில் ஆண்டர்சன் பந்தில் ஸ்டோக்ஸின் அற்புதமான கேட்சுக்கு வெளியேற 85 ரன்களில் நின்று போனார் வாஷிங்டன் சுந்தர்.

முன்னதாக இன்று காலை ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு மிகப்பெரிய சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து லீச் பந்தில் பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், பந்து கொஞ்சம் கூடுதலாக எழும்பியதில் சிக்கினார் அஸ்வின். ஷாபாஸ் நதீமும் டக் அவுட் ஆகி லீச்சிடம் விக்கெட்டை கொடுத்தார். இஷாந்த் சர்மா ஒரு அபார ஸ்லாக் ஸ்வீப் பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்து ஆண்டர்சனின் எகிறு பந்தில் ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஆனால் வாஷிங்டன் சுந்தர் ஆடிய இன்னிங்ஸ் அதியற்புத ரகத்தைச் சேர்ந்தது இதுவரை 7ம் நிலையில் இறங்கும் வீரர் ஒருவர் இரண்டு அரைசதங்களை தொடர்ச்சியாக டெஸ்ட்டில் அடித்துள்ளாரா என்பதைப் பார்க்க வேண்டும் சுந்தர் தன் 2வது அரைசதத்தை எடுத்தார்.

மொத்தம் 138 பந்துகளைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு ஆட்டம் காட்டினார். சதம் எடுத்திருந்தால் சொந்த மண்ணில் சதம் என்ற ஒரு அரிய சந்தோஷம் கிடைத்திருக்கும், அதற்குள் பும்ரா அவுட் ஆனதால் இந்தியா 337 ரன்களுக்குச் சுருண்டது. உலகிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சனை நேராக சுந்தர் அடித்த சிக்ஸ் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

First published:

Tags: India Vs England, Washington Sundar