‘வாஷிங்‘டன்’ சுந்தர் என்று எழுதக் காத்திருந்தேன்: சத வாய்ப்பை இழந்த சுந்தர் குறித்து தினேஷ் கார்த்திக் வேதனை

வாஷிங்டன் சுந்தர்.

அதே போல் வாஷிங்டன் சுந்தர் நேற்று 60 நாட் அவுட்டிலிருந்து இன்றும் தனது அபாரமான ட்ரைவ், மேலேறி வந்து தூக்கி அடித்தல் போன்ற ஷாட்களால் மேலும் 36 ரன்களைச் சேர்த்து 96 ரன்களுக்கு வந்தார். அக்சர் படேலும் இவரும் மேலும் ஒரு சதக்கூட்டணி அமைத்தனர். அக்சர் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக, 5 பந்துகளில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மளமளவென்று இழந்து 365 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 • Share this:
  அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் நாயகர்கள் என்று அறிவிக்க வேண்டுமென்றால் அது ஒன்று ரிஷப் பந்த், இன்னொன்று வாஷிங்டன் சுந்தர் என்றால் அது மிகையல்ல.

  நேற்று 146/6 என்று இங்கிலாந்தின் 205 ரன்களை எதிர்த்து இந்தியா கடுமையாகத் திணறிய போது ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் இணைந்து சதக்கூட்டணி அமைத்தனர். பந்த் முதல் 82 பந்துகளில் அரைசதம் கண்டு அடுத்த 33 பந்துகளில் சதம் விளாசினார். மிகப்பெரிய சதம் என்று நிபுணர்களால் பாராட்டப்படும் இன்னிங்ஸ் ஆயிற்று அது.

  அதே போல் வாஷிங்டன் சுந்தர் நேற்று 60 நாட் அவுட்டிலிருந்து இன்றும் தனது அபாரமான ட்ரைவ், மேலேறி வந்து தூக்கி அடித்தல் போன்ற ஷாட்களால் மேலும் 36 ரன்களைச் சேர்த்து 96 ரன்களுக்கு வந்தார். அக்சர் படேலும் இவரும் மேலும் ஒரு சதக்கூட்டணி அமைத்தனர். அக்சர் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக, 5 பந்துகளில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மளமளவென்று இழந்து 365 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

  இஷாந்த் சர்மா டக் அவுட் ஆக, சிராஜ் பவுல்டு ஆனார், இருவரையும் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்த ரன்னர் முனையில் பரிதாபமாக 96 நாட் அவுட்டுடன் தேங்கினார் வாஷிங்டன் சுந்தர்.

  2வது முறையாக அவர் இவ்வாறு தேங்கி விட்டார். இரண்டு சத வாய்ப்புகளும் கடைசி வீரர்கள் ஆட்டமிழந்ததால் பறிபோனது.

  இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்னொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் சதமெடுக்காததை நினைத்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.

  அதில், ‘வாஷிங் ‘டன்’ சுந்தர் என்று எழுதலாம் எனக் காத்திருந்தேன். பரவாயில்லை நான் இதனை விரைவில் பயன்படுத்த வேண்டி வரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விலைமதிப்பற்ற இன்னிங்ஸ் என்று ட்வீட் செய்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: