இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயருக்கு ஆடிவரும் இந்திய ஆஃப் ஸ்பின்னர், தமிழ்நாடு அணியைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் கெண்ட் பேட்ஸ்மென் ஒருவருக்கு வீசிய ஒரு பந்து ஆஃப் ஸ்ட்ம்பைப் பெயர்க்கும் அரிய காட்சி வைரலாகி வருகிறது, இதனை மேஜிக் பந்து என்று லங்கா ஷயர் விதந்தோதி வருகிறது, வீடியோவையும் வெளியிட்டது.
அண்மையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர், கென்ட் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதில் ஒரு பந்துதான் காக்ஸ் என்ற பேட்டருக்கு வீசிய அதியற்புத ஆஃப் ஸ்பின் பந்து.
ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு ஸ்பாட்டில் பிட்ச் ஆகி உள்ளே திரும்பியது பந்து, காக்ஸ் நன்றாக முன்னால் வந்து காலைத்தூக்கிப் போட்டு ஆடியும் பந்து அவரைக் கடந்து சென்று ஸ்டம்பைத் தாக்கியது, காக்ஸுக்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை பிட்சை பார்த்தார், ஸ்டம்பைப் பார்க்கிறார், வாஷிங்டன் சுந்தரைப் பார்க்கிறார்:
That is an incredible delivery from @Sundarwashi5 😲#LVCountyChamp pic.twitter.com/rLyMvMmI9l
— LV= Insurance County Championship (@CountyChamp) July 28, 2022
ஒருமுறை ரிக்கி பாண்டிங்குக்கு இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் கிரகாம் ஸ்வான் வீசிய ஆஃப் ஸ்பின் பந்து ஒன்று இப்படித்திரும்பி ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது ரிக்கி பாண்டிங்கையே திகைக்க வைத்தது. அதே போல் காக்ஸை ஆட்டம் காண வைத்தது வாஷிங்டன் சுந்தரின் இந்தப் பந்து.
இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் நிர்வாகமும் வாஷிங்டன் சுந்தரின் இந்த மேஜிக் பந்து வீடியோவை அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்தப் போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்ந்து சுந்தர் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். முன்னதாக, முதலில் பேட்டிங் இறங்கிய லங்காஷயர் அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கென்ட் அணி 270 ரன்கள் எடுத்தது, 125 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய லங்காஷயர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 436 ரன்கள் குவித்தது. பின்னர் 127 ரன்களுக்கு கென்ட் அணியை சுருட்டி அபார வெற்றி பெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Washington Sundar