ஜனவரி 19ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடங்கும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு வாஷிங்டன் சுந்தர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது, அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தருக்கு கடந்த வாரம் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு ஒருவார காலமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் இதனையடுத்து அணியில் சேர்க்கப்படலாமா கூடாதா என்பது பற்றி பிசிசிஐ உத்தரவுக்காகக் காத்திருக்கிறது.
வாஷிங்டன் சுந்தர் பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் இருந்தார். ஆனால் இவருடன் இருந்த மற்ற வீரர்களுக்கு, அதாவது தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு செல்லும் மற்ற வீரர்களுக்கு கொரோனா நெகெட்டிவ் என்று முடிவு வெளியானதால் சிக்கல் இல்லை.
கடந்த மார்ச் 2021-ல் வாஷிங்டன் சுந்தர் இந்தியாவுக்காக கடைசியாக ஆடினார். அது இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி, அகமதாபாத்தில் நடந்த போட்டியாகும். அதன் பிறகு காயத்தினால் விலகினார்.
சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபியில் வாஷிங்டன் சுந்தர் 8 போட்டிகளில் 148 ரன்களுடன் 16 விக்கெடுகளை கைப்பற்றி அதில் ஒரு போட்டியில் 5/48 என்று அசத்த தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அதில் இமாச்சலத்திடம் சாம்பியன் கோப்பையை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று
இந்நிலையில் அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் மாற்று ஏற்பாடுகள் குறித்தும், அவரை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்புவது பற்றிய மருத்துவ மற்றும் பிற ஆலோசனைகளுகாக பிசிசிஐ காத்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona positive, India vs South Africa, Washington Sundar