ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்திருப்பதாகவும் அதில் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது மிகுந்த பெருமையளிப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தரின் தந்தை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தரின் தந்தை சுந்தர் கூறுகையில், “வாஷிங்டன் சுந்தர் செய்த சாதனை என்னால் ஏற்கனவே கணித்த ஒன்றுதான் எனவும் தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையை வாஷிங்டன் நிறைவேற்றியிருப்பதாகவும் உச்சிமுகர்ந்துள்ளார் அவர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது.
பார்டர் - கவாஸ்கர் தொடரை 2 க்கு 1 என்ற ஆட்டக் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வசப்படுத்தியதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் அறிமுக வீரர்களாக களம் கண்டனர். இருவரும் முதல் இன்னிங்ஸில் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தனர்.
குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 62 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் உயர்விற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் தாக்கூருடன் 7வது விக்கெட்டிற்கு பாட்னர்ஷிப் அமைத்து 123 ரன்கள் குவித்து அசத்தினார்.
அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டுடன் 22 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
வாழ்வா? சாவா? போட்டியில் 5 அறிமுக வீரர்களை களமிறக்கி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும். இதில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது தமிழராக மிகுந்த பெருமையளிப்பதாக மகிழ்ச்சியடைந்தார் வாஷிங்டன் சுந்தரின் தந்தை.
இந்திய அணியின் சமீப கால வெற்றியில் தமிழக வீரர்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கம் பெருமை சேர்க்கும் விதமாக ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.