Home /News /sports /

ரஹானே என்ன பாவம் செய்தார்?- பார்மில் இருந்தபோதே ODI-அணியிலிருந்து கல்தா- ஓர் அலசல்

ரஹானே என்ன பாவம் செய்தார்?- பார்மில் இருந்தபோதே ODI-அணியிலிருந்து கல்தா- ஓர் அலசல்

அஜிங்கிய ரகானே

அஜிங்கிய ரகானே

பல வடிவத்தில் ஆடும் திறமையும், கேப்டன்சிக்கான மதிநுட்பமும் இருந்தும் சில வீரர்கள் தொடந்து ஒழிக்கப்பட்டு வருகின்றனர், மாறாக சில வீரர்களுக்கு மார்க்கெட் உயர்வதால் அணியில் இடம் நீடிக்கிறது. மற்றவர்களுக்கு மார்க்கெட் காலியாகிவருகிறது, பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் போல் ஆகிவிட்டது கிரிக்கெட் அணியும் அதன் தேர்வும். இதில் சிக்கியவர்தான் அஜிங்கிய ரஹானே என்ற பன்முகத்திறன் படைத்த வீரர்.

மேலும் படிக்கவும் ...
பல வடிவத்தில் ஆடும் திறமையும், கேப்டன்சிக்கான மதிநுட்பமும் இருந்தும் சில வீரர்கள் தொடந்து ஒழிக்கப்பட்டு வருகின்றனர், மாறாக சில வீரர்களுக்கு மார்க்கெட் உயர்வதால் அணியில் இடம் நீடிக்கிறது. மற்றவர்களுக்கு மார்க்கெட் காலியாகிவருகிறது, பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் போல் ஆகிவிட்டது கிரிக்கெட் அணியும், அவற்றிலாவது மூலதனம்தான் தீர்மானிக்கிறது எனலாம், ஆனால் கிரிக்கெட்டில் கிரிக்கெட்தானே தீர்மானிக்க வேண்டும். ஆனால் இங்கும் அப்படியல்ல என்பதில்  சிக்கியவர்தான் அஜிங்கிய ரஹானே என்ற பன்முகத்திறன் படைத்த வீரர்.

ஆகாஷ் சோப்ரா ஒருமுறை ரஹானேவை ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கியதை அற்புதமாக வர்ணித்த போது, “பாலிலிருந்து ஈயை வழித்து தூக்கி எறிவது போல் ரஹானேவை தூக்கி எறிந்தனர்” என்று வர்ணித்ததும் நினைவுகூரத்தக்கது.

"சில நேரங்களில், உண்மை என்னவென்றால், நீங்கள் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறீர்கள், குறிப்பாக கடந்த 2-3 ஆண்டுகளில் ரஞ்சி கிரிக்கெட் மற்றும் பிற உள்நாட்டு விளையாட்டுகள் இல்லாத நிலையில், நீங்கள் டெஸ்ட் போட்டியில் ரன்களை எடுக்க முடியாது என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். வீட்டில் உட்கார்ந்தபடியே ரன்களை யாரும் எடுக்க முடியாது” என்று நிகழ்ச்சி ஒன்றில் ரஹானே புலம்புவதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.

2011-முதல் 2018 அரை ரஹானே 90 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடி 2962 ரன்களை 35.26 என்ற சராசரியின் கீழ் சதங்கள் 24 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் அவர் இறங்கும் டவுன் ஆர்டரைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் 78.63 என்று வைத்திருப்பதும் நல்ல ஸ்ட்ரைக் ரேட் தான்.

இவரை ஒருநாள் அணியிலிருந்து ட்ராப் செய்வதற்கு முன்பாக 2017ம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகத் தொடங்கி அவரது ஸ்கோரை எடுத்துப் பார்த்தால், 62, 103, 72, 60, 39, 5, 5, 55, 70, 53, 61, 79, 11, 8, 8, 34 நாட் அவுட். சொதப்பல் கம்மி மேலும் கடினமான அணிகளுக்கு எதிராக கடினமான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட ரன்களாகும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் எடுத்தது 103, 111 ரன்கள் இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் எடுக்கப்பட்டது. 106 ரன்கள் இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் எடுக்கப்பட்டது.

ஆனால் கடைசியாக விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த 96 பந்து 129 ரன்கள் போட்டியில் டார்கெட் 202 ரன்கள்தான் கடைசியில் ரகானே 34 நாட் அவுட். இதுதான் ரகானே ஆடிய கடைசி ஒருநாள் போட்டி. அதன் பிறகு டிராப் செய்யப்பட்டார், தேர்வுக்கு பரிசீலனை செய்யப்படாமலே கூட போய் விட்டார். இன்று ஒரே வடிவத்தில் மட்டும் ஆடிவரும் அவரை அதிலிருந்தும் தூக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன. ஏன் கோலியும்தான் ஒன்றும் சமீபமாக ஆடவில்லை. புஜாரா ஆடவில்லை. தோனி மட்டும் என்ன தன் கடைசி காலத்தில் படுத்தி எடுத்துவிட்டுத்தானே சென்றார்.

ரஹானே கூறுவதைப் பார்ப்போம்: “பிப்ரவரி 2018க்கு முன் நான் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடிவந்தேன், நான் உண்மையில் நன்றாகவே விளையாடி வந்தேன். ஆனால் திடீரென என்னை நீக்கினார்கள். நான் அந்த விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை, ஆனால் 2014 முதல் நான் நன்றாகவே ஆடிவந்தேன். ஒருநாள், டெஸ்ட் இரண்டுமே எனக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் ட்ராப் செய்யப்பட்ட பிறகே எனக்கு ஆடுவதற்கு போட்டிகள் இல்லை, வெறும் டெஸ்ட் மேட்ச்கள்தான், அதுவும் நிறைய இடைவெளிகளுடன் நடக்கும்.” என்கிறார் ரகானே.

2019 உலகக்கோப்பையின் போது 4ம் நிலைக்கான வீரர்களுக்காக பெரிய பேட்டி, கோலியின் வாய்ப்பந்தல், ரவிசாஸ்திரியின் மீடியா வாய்ப்பிளத்தல் எல்லாம் நடந்தது, ஆனால் கடைசியில் 4ம் நிலைக்கான வீரரைக் காணவில்லை. அம்பதி ராயுடுவை எடுக்காமல் விஜய் சங்கர் என்பவரை எடுத்தனர், அவர் இன்று எங்கே? கேதார் ஜாதவ்வை விட என்ன ரகானே மோசமானவரா? ஆனால் ரஹானே ஒழிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவை விராட் கோலி அவமானப்படுத்தி அவரே போகுமாறு செய்த பிறகே ரவிசாஸ்திரி, கோலி கூட்டணி வேகப்பந்து வீச்சினாலும் மற்ற அணிகள் பலவீனமானதாலும் பெற்ற வெற்றிகளை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டதில் நல்ல வீரர்கள் பலர் காணாமல் போனதுதான் மிச்சம்.
Published by:Muthukumar
First published:

Tags: Ajinkya Rahane, ODI, Rahane

அடுத்த செய்தி