டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பை..பை.. சொன்ன பாகிஸ்தான் வீரர்!

வரப்போகும் உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சேம்பியன் போட்டி குறித்து ஐசிசி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அப்போட்டியில் பாகிஸ்தான் தேர்வுக்குழு கமிட்டி சிறந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முகமது அமீர் கூறியுள்ளார்

Web Desk | news18
Updated: July 26, 2019, 6:32 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பை..பை.. சொன்ன பாகிஸ்தான் வீரர்!
முகமது அமீர்
Web Desk | news18
Updated: July 26, 2019, 6:32 PM IST
உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம், தனது 17ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.  அவருக்கு முதல் போட்டியாக அமைந்தது இலங்கை அணியுடன் மோதிய டெஸ்ட் போட்டி.

இதுவரை, 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 27 வயதுதான் ஆகிறது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது தனக்கு மகிழ்ச்சியளித்தது எனவும், தற்போது ஒருநாள் போட்டி, மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் தன் முழு கவனத்தை செலுத்த இருப்பதாகவும், தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்

தான் எடுத்த இந்த முடிவு, தன்னுடைய சுய முடிவு என்றும், இதுவரை தனக்கு சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும், சக வீரர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும்  அமீர் கூறியுள்ளார்.நடந்து முடிந்த உலக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 17 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch: சூர்யாவுக்கு செக் வைக்கும் பிரபாஸ்

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...