Home /News /sports /

‘கிரிக்கெட்டை விட்டுட்டு உன் அப்பாவோட போய் ஆட்டோ ஓட்டு,’- நெருக்கடிகளையும் தந்தையின் நினைவையும் பகிர்ந்த சிராஜ்

‘கிரிக்கெட்டை விட்டுட்டு உன் அப்பாவோட போய் ஆட்டோ ஓட்டு,’- நெருக்கடிகளையும் தந்தையின் நினைவையும் பகிர்ந்த சிராஜ்

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

2020ல் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் நான் அவருடன் பேசும்போதெல்லாம் நாங்கள் அழைப்பில் அழுதுகொண்டே இருந்தோம். அதனால் நான் அவருடன் அதிகம் பேசவில்லை, ஏனென்றால் அவர் அழுது கொண்டே இருப்பார், அது என்னை மிகவும் பாதித்தது- சிராஜ் வேதனை

மேலும் படிக்கவும் ...
 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :
  இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறுகையில், 2019 ஐபிஎல் மோசமான சீசனுக்குப் பிறகு கிரிக்கெட்டை விட்டுட்டு உன் அப்பாவோட ஆட்டோ ஓட்ட போயிடு என்று பலரும் கூறியதாக தெரிவித்தார். ஆனால் எம்.எஸ் தோனியின் ஆலோனைட் தன்னை மீட்கவில்லை எனில் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தே போயிருக்கும் என்று மனம் திறந்தார் முகமது சிராஜ்.

  ஏறக்குறைய ஓவருக்கு 10 ரன்கள் என்ற சிக்கன விகிதத்துடன் 9 போட்டிகளில் சிராஜ் ஏழு விக்கெட்டுக்களை மட்டுமே எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் அந்த சீசனில் பேரழிவுக்குக் கொண்டு சென்றது. அந்தத் தொடரில் கடைசி இடத்தில் முடிந்தது ஆர்சிபி.

  அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவர் வீசிய பவுலிங் அவர் கிரிக்கெட் வாழ்க்கையையே நாசமாக்கியிருக்கும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவர் 2.2 ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசப்பட்டு 36 ரன்களை வாரி வழங்கினார். இதில் இரண்டு பீமர்கள் அடங்கும், இதனியடுத்து கேப்டன் விராட் கோலி அவரை பந்துவீச்சிலிருந்து அகற்றும்படியாக ஆனது.

  இது தொடர்பாக சிராஜ் கூறும்போது, “நான் அந்த ஓவர்களை வீசி, இரண்டு பீமர்களை வீசிய போது ‘உன் அப்பாவோட பேசாம ஆட்டோ ஓட்டப் போயிடு, கிரிக்கெட்டை விட்டு ஓடிப்போயிடு என்று என்னை பலரும் எச்சரித்தனர்.

  இப்படி ஏகப்பட்ட கருத்துக்கள் வந்தன, என் காதுகளுக்கு, ஆனால் நான் அணிக்குத் தேர்வானதும் தோனி சொன்னதுதான் எனக்கு ஆறுதல், உன்னைப் பற்றி வெளியில் பேசுவதையெல்லாம், வெளி மதிப்பீடுகளையெல்லாம் கண்டு கொள்ளாதே என்றார் தோனி. நன்றாக ஆடினால் போற்றுவர், இல்லையெனில் தூற்றுவர் எனவே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் பொறுத்தருளி உன் வேலையில் கவனம் செலுத்து என்றார் தோனி.

  அன்று என்னை சரமாரியாக கிண்டல் செய்தவர்கள் இன்று நீதான் சிறந்த பவுலர் என்றனர், தோனி சொன்னது உண்மைதான். அதனால் எனக்கு யாருடைய கருத்தும் தேவயில்லை, நான் அதே சிராஜ்தான். 2020ல் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் நான் அவருடன் பேசும்போதெல்லாம் நாங்கள் அழைப்பில் அழுதுகொண்டே இருந்தோம். அதனால் நான் அவருடன் அதிகம் பேசவில்லை, ஏனென்றால் அவர் அழுது கொண்டே இருப்பார், அது என்னை மிகவும் பாதித்தது.

  ஐபிஎல் முடிந்ததும் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று யாரும் சொல்லவில்லை. நான் போன் செய்தாலோ அல்லது கேட்டாலோ, அவர் தூங்குகிறார் அல்லது ஓய்வெடுக்கிறார் என்று சொல்வார்கள், அதனால் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று நான் அவர்களிடம் கூறுவேன். ஆஸ்திரேலியா சென்ற போது தான் அப்பா இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார் என்று தெரிந்தது.

  நான் என் முழு குடும்பத்துடனும் சண்டையிட்டேன் ... 'ஏன் சீக்கிரம் என்னிடம் சொல்லவில்லை'. இது என் தொழிலையோ அல்லது என் கவனத்தையோ பாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்று அவர்கள் கூறுவார்கள், அது என்னை மேலும் கோபப்படுத்தியது. நீங்கள் முன்பே சொல்லியிருந்தால், ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுமுன் அவரையாவது சந்தித்திருப்பேன் என்று அவர்களிடம் சொன்னேன்.

  இறுதியாக அவர் என்னிடம் பேசியபோது, ​​அவர் என்னிடம் கேட்டதெல்லாம், நாட்டிற்காக விளையாடுவதிலும், எனது கனவை நிறைவேற்றுவதிலும், நாட்டைப் பெருமைப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான் நான் நினைவில் வைத்தேன், அதனால்தான் நான் அணியுடன் தங்கினேன்.

  அவர் இறந்து போன அந்த நாளை மறக்க நினைத்தேன், ஆனால் அவரது வார்த்தைகள் மட்டுமே என்னை மீண்டும் ஆஸ்திரேலியாவில் வைத்திருக்கின்றன. எனது புகைப்படம் சிறப்பாக வெளிவந்து, அங்கு நின்று (டெஸ்ட் அறிமுகத்தில்) தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்தால், அவர் எவ்வளவு பெருமையாக இருந்திருப்பார், என்பதை என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்திய ஜெர்சியில் நான் தேசிய கீதம் பாடியதை அவர் பார்த்திருந்தால் உருகியிருப்பார்.

  நான் தேசிய கீதம் பாடும் போதும் அவருடைய வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன” இவ்வாறு கூறினார் சிராஜ்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Dhoni, Mohammed siraj

  அடுத்த செய்தி