Home /News /sports /

உன் ‘லொட்டு’ பேட்டிங்கைப் பார்க்க யாரும் வரல்ல, சச்சின் ஷாட்களைப் பார்க்க வந்திருக்காங்க- கங்குலியை கலாய்த்து வீழ்த்திய ஷேன் வார்ன்

உன் ‘லொட்டு’ பேட்டிங்கைப் பார்க்க யாரும் வரல்ல, சச்சின் ஷாட்களைப் பார்க்க வந்திருக்காங்க- கங்குலியை கலாய்த்து வீழ்த்திய ஷேன் வார்ன்

கங்குலியை கலாய்த்த ஷேன் வார்ன்

கங்குலியை கலாய்த்த ஷேன் வார்ன்

ஷேன் வார்ன் மேஜிக் ஸ்பின்னர் பெரிய கேரக்டர் என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நிலையில் அவர் எதிரணியினரை நக்கல் நையாண்டி செய்வதில் வல்லவராக இருந்துள்ளார். நாம் ‘தாதா’ என்று கொண்டாடும் கங்குலியையே, சச்சின் டெண்டுல்கரைக்காட்டி ஸ்லெட்ஜ் செய்து வீழ்த்தியிருக்கிறார் ஷேன் வார்ன்.

மேலும் படிக்கவும் ...
    ஷேன் வார்ன் மேஜிக் ஸ்பின்னர் பெரிய கேரக்டர் என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நிலையில் அவர் எதிரணியினரை நக்கல் நையாண்டி செய்வதில் வல்லவராக இருந்துள்ளார். நாம் ‘தாதா’ என்று கொண்டாடும் கங்குலியையே, சச்சின் டெண்டுல்கரைக்காட்டி ஸ்லெட்ஜ் செய்து வீழ்த்தியிருக்கிறார் ஷேன் வார்ன்.

    டேரில் கலினன் என்ற தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மென் அப்போதெல்லாம் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்ட ஒரு அசாத்திய பேட்டர், ஆனால் ஷேன் வார்ன் என்றால் அவர் அவ்வளவுதான், 44 என்று இருந்த அவரது சராசரி ஷேன் வார்னினால் கடைசியில் 12 ஆக சரிந்த கதையும் உண்டு. ஒருமுறை கலினன் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்து களமிறங்கிய போது, ஷேன் வார்ன் அவரிடம், ‘உன் சொந்த மண்ணில் உன் மக்கள் முன்னால் உன்னை அவமானப்படுத்த காத்திருந்தேன் நண்பரே’ என்று கூறினார். ஆனால் அவரும் சும்மா இல்லை வார்னைக் கிண்டலடிக்கும் விதமாக, ‘இந்த 2 ஆண்டு நீ நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய் என்று தெரிகிறது’ என்றார்.

    பொதுவாக அவர் வாய் வார்த்தைகளால் ஸ்லெட்ஜ் செய்வது குறைவு, தன் செய்கையினால் ஒன்றுமில்லாத பந்தை வீசி விட்டு அப்படியே விக்கெட் பந்து போல் ஒரு பார்வை பார்ப்பார் பேட்டரை, சிக்சர் அடித்தாலும் ஏதோ பேட்டர் அவுட் ஆகியிருக்க வேண்டியது என்பது போல் ஒரு பார்வை பார்ப்பார்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் அன்று கிரிக்கெட் வர்ணனையாளர் ‘நானி’ கூறியது போல், ‘வார்ன், வேகப்பந்து வீச்சாளரின் ஆக்ரோஷ, போட்டிமனப்பான்மை கொண்ட ஸ்பின்னர்’ என்றார். இதுதான் உண்மை.

    இந்நிலையில் சவுரவ் கங்குலி அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 1999-2000 தொடரில் இறங்கிய போது வார்ன் அவரை வெறுப்பேற்றி கடைசியில் அவரை வீட்டுக்கே அனுப்பிய சம்பவம் நடந்தது.

    இது குறித்து இயன் சாப்பல், ‘ஷேன்’ என்ற ஆவணப்படத்தில் கூறிய போது, “ஷேன் வார்ன் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து கங்குலிக்கு வீசினார், பந்து உண்மையில் பவுலர் காலடித் தடத்தில் பட்டு திரும்ப வேண்டும், ஆனால் பந்துகள் திரும்பவில்லை, கங்குலி அதை காலால் தடுத்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார், குறிப்பாக எளிதாக ஆடிக்கொண்டிருந்தார்.

    சச்சின் டெண்டுல்கர் அப்போது எதிர் முனையில் நின்று கொண்டிருந்தார். கங்குலி இப்படி ஆடிய பிறகே ஷேன் வார்ன், கங்குலியைப் பார்த்து, “ஏய், இங்க இருக்கற 40,000 ரசிகர்கள் நீ லொட்டு வைப்பதை பார்க்க வரவில்லை, எதிர் முனையில் இருக்கிறார் பார், சச்சின் டெண்டுல்கர், அவரது ஹிட்டிங்கைப் பார்க்க வந்திருக்கின்றனர், என்று ஷேன் வார்ன் கூறினார்.

    இப்படி ஷேன் வார்ன் கூறியவுடன் கங்குலி ஆத்திரமடைந்து ஒரு ஓவர் கழித்து ஷேன் வார்ன் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்டு ஆனார்” என்றார் இயன் சாப்பல்.

    தாதாவையே தன் ஸ்லெட்ஜிங்கினால் மடக்கினார் ஷேன் வார்ன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ganguly, India vs Australia, Sachin tendulkar, Shane Warne

    அடுத்த செய்தி