ஷேன் வார்னின் 'அபத்தமான' டயட் மரணத்துக்குக் காரணமா?- மவுனம் கலைக்கும் மேலாளர்
ஷேன் வார்னின் 'அபத்தமான' டயட் மரணத்துக்குக் காரணமா?- மவுனம் கலைக்கும் மேலாளர்
ஷேன் வார்ன்.
ஷேன் வார்ன் சமீபத்தில் தனது விடுமுறைக்கு செல்வதற்கு முன்பு இரண்டு வாரம் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்ட ‘அபத்தமான’ டயட்டுக்குப் பிறகு 'மார்பு வலி மற்றும் வியர்வை' என்று புகார் செய்ததாக ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவானின் மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்தார்.
ஷேன் வார்ன் சமீபத்தில் தனது விடுமுறைக்கு செல்வதற்கு முன்பு இரண்டு வாரம் திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்ட ‘அபத்தமான’ டயட்டுக்குப் பிறகு 'மார்பு வலி மற்றும் வியர்வை' என்று புகார் செய்ததாக ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவானின் மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இப்போதெல்லாம் நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் உடல் பருமன் ஆகிவிடக்கூடாது, கொலஸ்ட்ரால் சேர்ந்து விடக்கூடாது என்று தாங்களாகவே சிலபல அபத்த டயட்களை உணவுமுறைகளை கடைப்பிடிக்கின்றனர், இது ஆபத்தானது என்று மருத்துவ உலகம் எச்சரித்தும் அப்படித்தான் அவர்கள் செய்கின்றார்கள். ஷேன் வார்ன் மேலாளரும் இத்தகைய அபத்தமான டயட்டுக்குப் பிறகே ஷேன் வார்ன் அடிக்கடி மார்வலி, வியர்வை என்று புகார் எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்னின் மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்ததாவது:
“அவர் இந்த அபத்தமான உணவு கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்டார், அதில் ஒன்றுதான் இந்த திரவ உணவுகளாக அருந்துவது. , அங்கு அவர் அடிப்படையில் 14 நாட்களுக்கு திரவங்களை மட்டுமே சாப்பிட்டார், மேலும் அவர் இதை மூன்று அல்லது நான்கு முறை செய்தார்.
அதுவே எல்லாம் அல்லது அதுவே ஒன்றும் இல்லை என்றுதான் கூற வேண்டும் வெண்ணெய் மற்றும் லாசேன் கொண்டு நடுவில் அடைத்த வெள்ளை பன்கள் அல்லது அவர் கருப்பு மற்றும் பச்சை நிற ஜூஸ்கள் என்று அவரது உணவு முறை கடந்த 2 வாரங்களாக இருந்தது. "வாழ்க்கையில் பெரும்பாலும் புகைப்பிடிப்பவராகவே இருந்தார். இது ஒரு பெரிய மாரடைப்பு என்று நினைக்கிறேன். அதுதான் நடந்தது என்று நினைக்கிறேன்.” என்றார்.
உடல் எடையைக் குறைக்கிறேன் என்று பலரும் உணவு முறைகளை தாறுமாறாக மாற்றுவது உலகெங்கும் இப்போது ஒரு ஃபேஷனாகி வருகிறது, இவையெல்லாம் ஆபத்தான காரியங்கள் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது, ஆனால் ஷேன் வார்ன் எந்த எச்சரிக்கைக்கும் அப்பாற்பட்டவர் என்பது அறிந்ததுதானே!
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.