துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்றேன் - இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் பரபரப்பு பேட்டி

மனசோர்வை போக்க குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும் அதிலிருந்து வெளிவந்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்றேன் - இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் பரபரப்பு பேட்டி
பிரவீன் குமார்
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மனஅழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சிக்கு செய்ததாகவும் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறி உள்ளார்.

மித வேகப்பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை திணறடித்தவர் பிரவீன் குமார். கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர்.

இந்திய அணிக்காக 68 ஒரு நாள், 6 டெஸ்ட் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 67, 11 மற்றும் 8 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் 2018ம் ஆண்டு அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


இந்நிலையில் இவர் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் அளித்த பேட்டியில், “தன்னுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் ஏமாற்றமும், தனிமையும் கடுமையான மனஉளைச்சலை கொடுத்தது.

ஒரு நாள் இரவு தனது துப்பாக்கியை காரில் வைத்து கொண்டு வீட்டிலிருந்து புறபட்டேன். நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்தினேன். எனக்கு எதிரே துப்பாக்கி இருந்தது. ஆனால் காரில் எனது குழந்தைகளில் சிரித்த புகைப்படத்தை பார்த்த பின்பு எனது மனதை மாற்றிக் கொண்டேன். அதன்பின் அங்கிருந்து வந்துவிட்டேன்“ என்றார்.

தற்போது மனஅழுத்தத்தை குறைக்க சிசிச்சை எடுத்து, கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் மனசோர்வை போக்க குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும் அதிலிருந்து வெளிவந்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading