ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தினேஷ் கார்த்திக்கின் கடின உழைப்பை ஆச்சரியத்துடன் விவரித்த கவாஸ்கர்

தினேஷ் கார்த்திக்கின் கடின உழைப்பை ஆச்சரியத்துடன் விவரித்த கவாஸ்கர்

கவாஸ்கர்-கார்த்திக்

கவாஸ்கர்-கார்த்திக்

தினேஷ் கார்த்திக்கின் வியக்கத்தக்க மறுபிரவேசத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகப் பார்த்தனர். தினேஷ் கார்த்திக் ராஜ்கோட்டில் 21 பந்துகளில் 55 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணியை வெற்றி பெறச் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இது 16 ஆண்டுகளில் மிகக் குறுகிய வடிவத்தில் அவரது முதல் அரை சதமாகும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தினேஷ் கார்த்திக்கின் வியக்கத்தக்க மறுபிரவேசத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகப் பார்த்தனர். தினேஷ் கார்த்திக் ராஜ்கோட்டில் 21 பந்துகளில் 55 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணியை வெற்றி பெறச் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இது 16 ஆண்டுகளில் மிகக் குறுகிய வடிவத்தில் அவரது முதல் அரை சதமாகும்.

  இப்போது தினேஷ் கார்த்திக் ஒன்றிரண்டு இன்னிங்ஸ்களில் ஆடுவதை எப்படி பில்ட்-அப் கொடுத்து ஊடகம் எழுதுகின்றனவோ அதை விட பன்மடங்கு தோனியை எழுதியது என்பதுதான் இமேஜ் பில்டிங்கின் மறுபக்கம். ஆகவே இவர்களுக்கு ஒரு பிம்பம் தேவை, என்பதுதான் நாயக வழிபாட்டை கட்டமைக்கும் ஊடகங்களின் கருத்துருவாக்க வெகுமக்கள் மனோநிலை கட்டமைப்பாகும்.

  ஆனால் தினேஷ் கார்த்திக்கின் எழுச்சியின் பின்னணியில் பெரிய கடின உழைப்பு இருக்கிறது என்கிறார் சுனில் கவாஸ்கர். 2021-ல் இந்தியா, இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட போது கவாஸ்கரும் தினேஷ் கார்த்திக்கும் வர்ணனையாளர்களாக இருந்தனர்.

  அப்போது தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மறுபிரவேசம் அடைவதற்காக என்னென்ன கடின உழைப்புகளை மேற்கொண்டார் என்பதை தன்னிடம் பகிர்ந்து கொண்டை இப்போது மனம் திறந்து கூறியுள்ளார்.

  “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருவரும் வர்ணனை மேற்கொண்ட போது பெரும்பாலும் மதிய உணவுக்குச் செல்வோம். அல்லது டின்னர், காலை உணவு என்று சேர்ந்தே செல்வோம். அப்போதுதான் தினேஷ் என்னிடம் இந்திய அணியில் டி20 உலகக்கோப்பைக்கு நுழைவது தன் லட்சியம் என்றார்.

  யுஏஇயில் நடந்த டி20 உலகக்கோப்பைக்கு அவர் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது மெல்போர்ன் செல்லும் விமானத்தில் ஏறக்குறைய அவர் இடம்பிடித்து விட்டார். அவர் என்னிடம் தான் எப்படி எப்படியெல்லாம் பயிற்சி எடுத்தார் என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

  பயிற்சி என்றால் சும்மா சிந்தனையற்ற பயிற்சி கிடையாது, முழு சிந்தனையுடன் கூடிய பயிற்சியை அவர் மேற்கொண்டார். அதாவது ஒரு சூழ்நிலையை உருவகித்து அதற்கு தக்கவாறு தன் டவுன் ஆர்டரில் எப்படி ஆடுவது என்பதை பயிற்சி செய்தார்.

  இதற்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுக்க கிளப் ஒன்றிலும் சேர்ந்தார். இந்திய அணிக்குள் மீண்டு வருவதற்கான அர்ப்பணிப்பை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அதுவும் இப்போது அவர் ஆடும் விதம் அவரை நீங்கள் பாராட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை.

  கடின உழைப்பை இட்டார், அதன் விளைவு இன்று அவர் பார்த்து வருகிறார்” என்றார் சுனில் கவாஸ்கர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Dinesh Karthik, T20 World Cup