விராட் கோலி போல் இருக்க வேண்டும் - க்ருணால் பாண்டியா விருப்பம்

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட க்ருணால் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

news18
Updated: July 23, 2019, 11:36 AM IST
விராட் கோலி போல் இருக்க வேண்டும் - க்ருணால் பாண்டியா விருப்பம்
க்ருணால் பாண்டியா
news18
Updated: July 23, 2019, 11:36 AM IST
விராட் கோலியிடம் இருந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று க்ருணால் பாண்டியா கூறியுள்ளார்.

இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத்தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டி20 போட்டிகளில் விளையாட க்ருணால் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர், ‘வெஸ்ட் இண்டிஸ் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக விளையாட வேண்டும். கோலியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனை கோலியிடம் இருந்து கற்க விரும்புகிறேன்’ என்று பேசியுள்ளார்.


மேலும் இந்திய ‘ஏ’ அணியில் விளையாடியது நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து. கடந்த 2 மற்றும் 3 ஆண்டுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா நாடுகளில் விளையாடினேன். அப்போது சீனியர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்றும் க்ருணால் பாண்டியா கூறியுள்ளார்

3 டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்: 

கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த்,  க்ருனால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி

Loading...



Also watch

First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...