• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேற வேண்டும், ஆனால்.... : சோயிப் அக்தர் வைத்த ட்விஸ்ட்

இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேற வேண்டும், ஆனால்.... : சோயிப் அக்தர் வைத்த ட்விஸ்ட்

shoaib akhtar

shoaib akhtar

தனிப்பட்ட முறையில் இந்திய அணி உலகக் கோப்பை டி20 தொடரின் ஃபைனலுக்கு முன்னேற வேண்டும் என விரும்புகிறேன் என அக்தர் கூறியுள்ளார்.

  • Share this:
இந்திய அணி உலகக் கோப்பை டி20 தொடரின் ஃபைனலுக்கு முன்னேறி, மீண்டும் பாகிஸ்தான் அணியிடம் தோற்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது, மேலும் இதுவரை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை என்ற வரலாற்று பெருமையும் இதன் மூலம் தகர்க்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நியூசிலாந்து அணியுடனும் இந்திய அணி தோல்வியை தழுவியது. கோப்பை வெல்லக்கூடிய அணியாக கருதப்பட்ட இந்திய அணிக்கு, அடுத்தடுத்த தொடர் தோல்விகளால் அடுத்த சுற்று வாய்ப்பை கேள்விக்குறியாக்கி உள்ளன.

இருப்பினும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கான சிறிய வாய்ப்பில் இன்னமும் நீடிக்கிறது. இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது பிற அணிகளின் தயவினால் மட்டும் தான் முடியும் என்ற நிலை உள்ளது.

Also read:  தனியார் பள்ளியின் கழிவறையில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள்.. பெண்களை வீடியோ எடுத்தது அம்பலம்..

அடுத்த போட்டியில் நமீபியா அணியை இந்திய அணியை வீழ்த்துவதுடன், நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் தோற்கடிக்க வேண்டும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு சுக்குநூறாகிவிடும்.

இந்நிலையில், இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி ஃபைனலுக்கு வர வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அடடே அக்தருக்கு இந்தியா மீது என்ன ஒரு பாசம் என நினைக்கத்தோன்றுகிறதா. சற்று பொறுங்கள். அவர் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறி வந்து பாகிஸ்தான் அணியுடன் மீண்டும் ஒரு முறை தோற்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Also read:  குழந்தைகள் பட்டாசு வெடித்ததால் ஆத்திரத்தில் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபர்.. இரு பெண்களுக்கு தீக்காயம்..

அக்தர் தனது யூடியூபில் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது, “தனிப்பட்ட முறையில் இந்திய அணி உலகக் கோப்பை டி20 தொடரின் ஃபைனலுக்கு முன்னேற வேண்டும் என விரும்புகிறேன். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோத வேண்டும். மீண்டும் ஒரு முறை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும். அது தான் சிறந்த கிரிக்கெட் ஆக இருக்கும். அப்படி நடந்தால் அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்.

முதலிரண்டு போட்டிகளில் தோல்வி அடைவதால் இந்திய அணியின் உலகக் கோப்பை தொடர் பயணம் முடிவுக்கு வந்துவிடாது என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். தற்போது உலகக் கோப்பை தொடர் மிகவும் சுவாரஸ்யமாக மாறியிருக்கிறது. நடக்கவே நடக்காது என கூறப்பட்ட அந்த அதிசயத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி நியூசிலாந்துக்கு பதற்றமானதாக இருக்கும். ஏற்கனவே அந்த அணியும் பாகிஸ்தானுடன் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி கிட்டத்தட்ட காலிறுதி ஆட்டம் போலத்தான் இருக்கும்.

Also read: டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஜஸ்பிரித் பும்ரா படைத்த புதிய சாதனை..

இவ்விரண்டு அணிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் பாகிஸ்தானுடன் சேர்ந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி மட்டுமல்லாது இந்தியாவும் அடுத்த சுற்றுக்கு நகர ஒரு வாய்ப்பு ஏற்படும். ஆனால் அப்படி நடந்தால் பல்வேறு சர்ச்சைகள் உருவாகும். தற்போதைய நிலையில் இந்தியாவின் தலையெழுத்து நியூசிலாந்திடம் உள்ளது” இவ்வாறு சோயிப் அக்தர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: