கொரோனா வார்டாக மாறுகிறதா வான்கடே மைதானம்..?

மும்பை கிரிக்கெட் சங்கம் அனுமதி அளிக்கும்பட்சத்தில் வான்கடே மைதானம் கொரோனா வார்டாக மாறுகிறது.

கொரோனா வார்டாக மாறுகிறதா வான்கடே மைதானம்..?
கோப்பு படம்
  • Share this:
மும்பையின் வான்கடே மைதானம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாறலாம் எனக் கருதப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவிலே முதல் இடத்தில் உள்ளது. இதுவரை 27 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், பரிசோதனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்த மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வான்கடே மைதானத்தை தற்காலிகமாக தங்களிடம் வழங்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.


இதைத் தொடர்ந்து மும்பை கிரிக்கெட் சங்கம் அனுமதி அளிக்கும்பட்சத்தில் வான்கடே மைதானம் கொரோனா வார்டாக மாறுகிறது.

Also see...href="https://www.youtube.com/News18TamilNadu">YouTube
First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading