ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வெளிநாட்டு வீரரை வம்பிழுத்த வாகப் ரியாஸ்: பிஎஸ்எல் களத்தில் நடந்த கசப்பான சம்பவம்

வெளிநாட்டு வீரரை வம்பிழுத்த வாகப் ரியாஸ்: பிஎஸ்எல் களத்தில் நடந்த கசப்பான சம்பவம்

வாகப் ரியாஸ்

வாகப் ரியாஸ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த டி20 போட்டியின் போது, பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் வாகப் ரியாஸ் இங்கிலாந்தின் ஜேசன் ராயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாகிஸ்தானுக்கு எந்த வெளிநாட்டு அணியும் வந்து விளையாட தயங்கும் இந்த தருணத்தில், இதுபோன்ற சம்பவங்கள் வரவேற்கத்தக்கதல்ல என கிரிக்கெட் விமர்சகர்கள் இதற்கு தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் ஐபிஎல் போன்றே பாகிஸ்தானின் பிஎஸ்எல், அதாவது பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற கிரிக்கெட் தொடர் ஐந்தாவது முறையாக நடைபெற்று வருகிறது.

இதில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸ்லமி ஆகிய அணிகளுக்கிடையே நடந்த டி20 லீக் போட்டியின் போது கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் ஜேசன் ராய், பெஷாவர் அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் வாகப் ரியாஸ் பந்தை சேதப்படுத்தியதாக புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த வாகப் ரியாஸ் களத்திலேயே அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து விஷயம் கை மீறிப்போவதை உணர்ந்த சர்பராஸ் உள்ளிட்ட சக வீரர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த ஆட்டத்தில் ஜேசன் ராய் ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார்.

இன்னிங்ஸ் முடிவில் வீரர்கள் பெவிலியன் திரும்பும் போது, ராயின் அருகில் வந்த வாகப் திரும்பவும் அவருடன் கை கொடுப்பது போல் வாக்குவதத்தில் ஈடுபட்டார். அவரை கை தட்டி கேலி செய்வது போல் வாகப்பின் முகம் சுளிக்க வைக்கும் வகையிலான செய்கைகள் தொடர்ந்தன. அப்போதும் சக வீரர்கள் தலையிட்டே இதை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. வாகப்பின் செயலுக்கு ரசிகர்கள் டிவிட்டரில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு எந்த வெளிநாட்டு அணியும் வந்து விளையாட தயங்கும் இந்த தருணத்தில், இதுபோன்ற சம்பவங்கள் வரவேற்கத்தக்கதல்ல என கிரிக்கெட் விமர்சகர்களும் தங்கள் பங்குக்கு இதற்கு தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் வாகப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see:

First published: