இங்கிலாந்து தொடருக்கான தயாரிப்புக்காக தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் மற்றும் வீரர்கள் இங்கிலாந்துக்கு முன் கூட்டியே செல்லவிருப்பதால் அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக லஷ்மண் நியமிக்கப்படவுள்ளார்.
இங்கிலாந்தில் முழு பயணத்தை இந்திய அணி மேற்கொள்ளவிருக்கிறது, இதில் மிக முக்கியமாக விராட் கோலி தலைமையில் அங்கு டெஸ்ட் தொடரை முடிக்காமல் திரும்பிய போது இந்திய அணி 2-1 என்று டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்தது, இப்போது இங்கிலாந்தின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளராக அதிரடி மன்னன் மெக்கல்லம் ஆகியோர் நியமிக்கப்பட்டதையடுத்து இந்திய அணி 5வது டெஸ்ட் போட்டியில் வெல்வது கடினம், எனவே அதை விட்டு விடக்கூடாது என்பதற்காக ராகுல் திராவிட் படை முன் கூட்டியே இங்கிலாந்து செல்கிறது, இதோடு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளும் உள்ளன.
ஜூன் 24-27 வரை லீசெஸ்டரில் நான்கு நாள் ஆட்டத்தில் விளையாடும் இந்தியாவின் டெஸ்ட் அணியுடன் திராவிட் இருப்பார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஜூலை 1-5 வரை நடைபெறுகிறது. ஜூன் 1 ஜூன் 19 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரின் முடிவிற்குப் பிறகு திராவிட் பயணத்தில் இணைவார்.
நார்த்தாம்ப்டன் ஷயர் மற்றும் டெர்பி அணிகளுக்கு எதிரான வார்ம் அப் போட்டிகளின் தேதியும் இந்திய-இங்கிலாந்து எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் தேதியும் இடிப்பதால் லஷ்மணும் அங்கு இருப்பார் என்று தெரிகிறது. லக்ஷ்மண் ஹைதராபாத் மற்றும் இந்திய உள்நாட்டு சுற்றுகளில் பெங்கால் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக பயிற்சியாளர் திறன்களில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கரீபியனில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியுடன் துணைப் பணியாளர் குழுவில் லஷமண் இருந்தார்.
மே 22ம் தேதி அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்காக இருவேறு இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது. இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் ஜூன் 15ம் தேதி இங்கிலாந்து செல்கின்றனர். 2007-ல் கடைசியாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்ற போது திராவிட் கேப்டனாக இருந்தார், இப்போது திராவிட் பயிற்சியாளராக இருக்கும் போது இங்கிலாந்தில் தொடரை வெல்லுமா என்பதுதான் கேள்வி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England, Rahul Dravid, VVS Laxman