ஷேவாக்குக்கு பதில் சி.எஸ்.கேவுக்கு தோனி தேர்வு! யார் இந்த வி.பி.சந்திரசேகர்?

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் இவர் உறுப்பினராக இருந்த போது தான் மகேந்திர சிங் தோனி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்

Vijay R | news18-tamil
Updated: August 16, 2019, 3:51 PM IST
ஷேவாக்குக்கு பதில் சி.எஸ்.கேவுக்கு தோனி தேர்வு! யார் இந்த வி.பி.சந்திரசேகர்?
வி.பி.சந்திரசேகர்
Vijay R | news18-tamil
Updated: August 16, 2019, 3:51 PM IST
சி.எஸ்.கே அணியில் ஷேவாக்கை எடுக்குமாறு அணி நிர்வாகம் கேட்டதாகவும் ஆனால் தோனி தான் சரியாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்ததாக வி.பி.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன்தொல்லையால் சென்னயைில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இடதுகை பேட்ஸ்மேனான வி.பி.சந்திரசேகர் 1980-களில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கியவர்.

இந்திய அணி சார்பில் 7 சர்வேதச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள வி.பி.சந்திரசேகர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 53 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்சமாக ரன்னாகும். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ள இவர் 81 போட்டிகளில் 4999 ரன்கள் எடுத்துள்ளார்.


தமிழக அணி 1987-88ல் 2வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றதற்கு முக்கிய பங்காற்றியவர். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் இவர் உறுப்பினராக இருந்த போது தான் மகேந்திர சிங் தோனி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தான் தேர்வு செய்த சர்வதேச போட்டிக்கான வீரர்களில் சிறந்தவர் தோனி தான் என்று அவரே கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் இந்தியாவில் அறிமுகமான போது சி.எஸ்.கே அணி வீரர்கள் அனைவரையும் இவர் தான் தேர்வு செய்துள்ளார். அணி நிர்வாகம் இவர் சொல்லும் வீரர்களை மறுப்பு தெரிவிக்காமல் வாங்குமாறு கூறியதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் சி.எஸ்.கே அணி வீரர்களைத் தேர்வு செய்யும் போது ஷேவாக் அப்போது சிறந்த ஃபார்மில் இருந்தார். அவரை சி.எஸ்.கே அணிக்கு தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளனர். ஆனால் தோனி இளம் வீரராக இருப்பதாலும், அணியை நன்றாக வழிநடத்துவார் என அவரை ஏலத்தில் எடுத்ததாக கூறியுள்ளார்.

Loading...

முதல் ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில்  ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததால், தான் கோபப்பட்டு மகேந்திர சிங் தோனியை கடுமையாக திட்டியதாக’ அவர் தெரிவித்துள்ளார்.

Also Watch

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...