• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்த தேர்தல் எனக்கு மிகவும் ஸ்பெஷல்... ஏன் தெரியுமா? - சச்சின் டெண்டுல்கர் பதில்!

இந்த தேர்தல் எனக்கு மிகவும் ஸ்பெஷல்... ஏன் தெரியுமா? - சச்சின் டெண்டுல்கர் பதில்!

சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர்.

#LokSabhaElections2019 - Voting this year has been so much more special: #SachinTendulkar | 4-ம் கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 71 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனக்கு இந்த மக்களவைத் தேர்தல் மிகவும் ஸ்பெஷலானது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 4-ம் கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 71 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்ட்ராவில் 17 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளிலும், மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாநிலத்தின் 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குச் சாவடி, polling station, வாக்குப்பதிவு
    வாக்குப்பதிவு.


    இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி அஞ்சலி மற்றும் முதல் முறையாக அவரது மகள் சாரா, மகன் அர்ஜூன் ஆகியோரும் வாக்களித்தனர்.

    குடும்பத்துடன் வாக்களித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட சச்சின், “ சாரா மற்றும் அர்ஜூன் ஆகியோர் முதல் முறையாக வாக்களித்ததால் எனக்கு இந்த தேர்தல் மிகவும் ஸ்பெஷலானது. அனைவரும் சென்று வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளார்.



    இந்த ட்வீட்டுக்கு கீழே ஏராளமானோர் வாழ்த்தி பதிலளித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் மகன் அவரைப் போல் கிரிக்கெட்டிலும், அவரது மனைவி அஞ்சலியைப் போல் மகள் மருத்துவத் துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மல்யுத்தத்தில் அசத்தும் பஜ்ரங், வினேஷ் போகத்... கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை!

    ரசிகரின் முகத்தில் குத்திய கால்பந்து வீரர் நெய்மர்... வைரலாகும் வீடியோ!

    நள்ளிரவில் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது.. உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

    எல்லை மீறிய ரோகித் சர்மாவுக்கு 15% அபராதம்... ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

    ரூ.40 கோடி மோசடி.. பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது தோனி வழக்கு!

    Also Watch...








    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: