ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரான சீன நிறுவனத்தை நீக்க முடியாது - பி.சி.சி.ஐ திட்டவட்டம்

”வருமானம் வரும்போது ஏன் புறக்கணிக்க வேண்டும்” என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரான சீன நிறுவனத்தை நீக்க முடியாது - பி.சி.சி.ஐ திட்டவட்டம்
ஐ.பி.எல் 2020
  • News18
  • Last Updated: June 19, 2020, 10:07 PM IST
  • Share this:
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மோதல் சூழல் நிலவியது. கடந்த திங்கள் அன்று இரு தரப்பு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சீன தரப்பில் 35 பேர் இறந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால், சீனா இது தொடர்பாக வாய் திறக்கவில்லை.

மேலும், சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்களையும் சீனா விடுவித்துளது. இதற்கிடையே, சீன தயாரிப்பு பொருட்கள் மற்றும் சீன தயாரிப்பு செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.


சமூக வலைதளங்களில் இதுதான் தற்பொழுது பேசுபொருளாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், சீனாவை தலைமையிடமாக கொண்ட விவோ நிறுவனம் கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2022 வரை ஐந்து வருடத்திற்கு ஐ.பி.எல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சராக இருக்க 2199 கோடி ரூபாய்க்கு பிசிசிஐ-யிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனத்தை  ஸ்பான்சரிலிருந்து பிசிசிஐ விலக்க வேண்டும் என்ற குரலும் சமூக வலைதளங்களில் ஒலிக்கத் தொடங்கியது. இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், விவோ நிறுவனத்தால் ஐ.பி எல் போட்டியின் போது வருடத்திற்கு சுமார் 440 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.


படிக்க’இந்தியனா இருந்தா உள்ளே வராதே...’ கொந்தளித்த ஆபாசப் பட நடிகையாக மாறிய கார் ரேஸ் வீராங்கணை


படிக்கராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு..
இதிலிருந்து 40 விழுக்காடு அரசிற்கு வரியாக செலுத்தப்படுகிறது. எனவே இந்நிறுவனத்தால் நமக்கு வருமானம் கிடைக்கும் போது ஏன் நாம் இதை புறக்கணிக்க வேண்டும்? என கூறியுள்ளார்.

சீன நிறுவனத்திடமிருந்து ஸ்பான்சர் பெறுவது வேறு, சீன நிறுவனத்திற்கு நாம் ஸ்பான்சர் வழங்குவது வேறு, இதை இரண்டையும் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார். விவோ நிறுவனத்தால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் விவோ நிறுவனத்தின் பொருட்களை வாங்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் வருவாயை ஸ்பான்சராக நாம் பெறுகிறோம். இதனால் நம்முடைய பணம் இந்தியாவிலேயே தங்கிவிடுகிறது எனவும் கூறியுள்ளார்.

சீன நிறுவனத்திற்கு நாம் கிரிக்கெட் மைதானம் கட்டும் உரிமையை வழங்கினால்தான் தவறு, அவர்களிடமிருந்து நாம் வருவாய் பெறுவது தவறு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

 
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading