கிரிக்கெட் நேரலையின் போது ஜாம்பவான் விவியன் ரிசர்ட்ர்ஸூக்கு திடீர் உடல் நலக்குறைவு

Vijay R | news18-tamil
Updated: August 31, 2019, 6:45 PM IST
கிரிக்கெட் நேரலையின் போது ஜாம்பவான் விவியன் ரிசர்ட்ர்ஸூக்கு திடீர் உடல் நலக்குறைவு
விவியன் ரிச்சர்ட்ஸ்
Vijay R | news18-tamil
Updated: August 31, 2019, 6:45 PM IST
கிரிக்கெட் நேரலை நிகழ்ச்சியின் போது விவியன் ரிச்சர்ட்ஸூக்கு திடிரென உடல்நலக் குறைவு ஏற்பட்டாரல் பரபரப்பு நிலவியது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள மைதானத்தில் நேற்று தொடங்கியது. கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் நேரலை நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் பங்கேற்றார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது திடிரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Loading...சிகிச்சைக்கு பின் மீண்டும் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, “உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். குணமாகி விட்டேன், தற்போதும் எந்த பிரச்சனையும் இல்லை“ என்று தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. பந்த் 27 ரன்களுடனும் விஹாரி 42 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Also Watch

First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...