WTC Final | கேன் வில்லியம்சனின் மெதுவான பேட்டிங்கை விமர்சித்து நாய் வீடியோவை பகிர்ந்த சேவாக்

சேவாக்

நியூசிலாந்து அணியின் கேப்டன் 177 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்னில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட்டாகினார்.

  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மெதுவாக விளையாடியதை முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார்.

    சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பின்யன்ஷிப் இறுதி போட்டி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ரிசர்வ் நாளான இன்று போட்டி டிராவில் முடியுமா அல்லது வெற்றியில் முடியுமா என்பது விக்கெட்களை விரைவில் வீழ்த்துவது பொறுத்தே அமையும். இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய போட்டி பரபரப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்களையும், அஸ்வின் 2 மற்றும் ஜடேஜா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    Also Read : மைதானத்தில் துண்டு கட்டிக்கொண்டு ஃப்ல்டிங் செய்த முகமது ஷமி - வைரல் வீடியோ

    நியூசிலாந்து அணியின் கேப்டன் 177 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்னில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட்டாகினார். கேன் வில்லியம்சன் சுமார் 30 ஒவர்களை எதிர்கொண்டு வெறும் 49 ரன்களை மட்டுமே எடுத்தார். இவரின் மெதுவான ஆட்டம் குறித்து பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் நாய் வீடியோ ஒன்றை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.



    சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நாய் ஒன்று அசந்து தூங்குவது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இன்று ஆடுகளத்தில் வில்லியம்சன் என்று கருத்தும் பதிவிட்டுள்ளார். வில்லியம்சன்னின் மெதுவான ஆமை வேக பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து சேவாக்  ட்வீட் செய்துள்ளார்.

    Also Read : போயும் போயும் இங்கிலாந்திலா முக்கிய இறுதிப் போட்டியை வைப்பது? - பீட்டர்சன் சாடல்

    இந்திய அணி 2-வது இன்னிங்சில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் சர்மா 30 ரன்னிலும், சுப்மன் கில் 8 ரன்னிலும் சவுதி பந்தில் அவுட்டாகினர். புஜாரா மற்றும் கோலி களத்தில் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: