ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 Worldcup 2021| இந்திய அணி வெளியேற்றம்: மீம்கள் போட்டு கலாய்த்த சேவாக், ஜாஃபர்

T20 Worldcup 2021| இந்திய அணி வெளியேற்றம்: மீம்கள் போட்டு கலாய்த்த சேவாக், ஜாஃபர்

சேவாக்.

சேவாக்.

கோப்பையை வெல்லும் அணியாகத் தொடருக்குள் நுழைந்தது இந்திய அணி கடைசியில் நெட் ரன் ரேட் என்று அடுத்தவர் வெற்றியிலும் தோல்வியிலும் தங்கள் வாய்ப்பை தேடி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. விராட் கோலி டி20 கேப்டனாக கடைசி தொடர் இதுவே.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டி ஆப்கானுக்கான வாய்ப்போ இல்லையோ ஏதோ இந்தியா-நியூசிலாந்து போட்டி போல் பார்க்கப்பட்டு இந்தியா தகுதி பெறுமா பெறாத என்ற ஹோதாவிலேயே பார்க்கப்பட்டது. கடைசியில் பரிதாபமாக இந்திய அணி வெளியேறியது, காரணம் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை பந்தாடி அரைஇறுதிக்குள் நுழைந்ததே.

  சீட்டாட்டம் ஆடுபவர்கள் மத்தியில் ஒரு வசனம் இடம்பெறும், அதாவது தோற்று தோற்று பணத்தை இழப்பவர் மீண்டும் மீண்டும் அதில் பணத்தை இடுவார், விட்டத எடுக்கறேன் என்பார், ஆனால் எடுத்ததையும் விட்டு விடுவார், அது போல்தான் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நிலைமையும். அதுவரை எடுத்த நற்பெயரெல்லாம் காற்றில் பறந்து போனது.

  கோப்பையை வெல்லும் அணியாகத் தொடருக்குள் நுழைந்தது இந்திய அணி கடைசியில் நெட் ரன் ரேட் என்று அடுத்தவர் வெற்றியிலும் தோல்வியிலும் தங்கள் வாய்ப்பை தேடி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. விராட் கோலி டி20 கேப்டனாக கடைசி தொடர் இதுவே. ரவி சாஸ்திரி விராட் கோலி வெற்றிக்கூட்டணியும் முடிவுக்கு வருகிறது. எல்லாவற்றையும் கோலியின் இஷ்டத்துக்கே விட்டு ரவிசாஸ்திரி நன்றாக ‘எஞ்ஜாய்’ செய்தார். அது இப்படி முடிந்து விட்டது.

  இந்நிலையில் நேற்று நியூசிலாந்து அபாரமாக ஆடி 8 விக்கெட்டுகளில் தொழில் நேர்த்தியுடன் வென்றது ஆப்கானிஸ்தானை, ஆனால் நம் ரசிகர்களுக்கெல்லாம் என்ன நினைப்பு என்றால் நியூசிலாந்து இன்னொரு முறையும் இந்தியாவை தோற்கடித்து விட்டது என்பதே. இன்னும் சிலர், ‘இப்படி ஆப்கானிஸ்தான் நம்மைக் கைவிட்டு விட்டதே’ என்று அங்கலாய்க்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் ‘நியூசிலாந்து என்ன சொம்பையா?’ என்பதே.

  இந்நிலையில் சும்மாவே வெளுத்து வாங்குவார் விரேந்திர சேவாக், இப்போது கேட்கணுமா இவரும், வாசிம் ஜாஃபரும் மீம்களை ஷேர் செய்து கடுமையாகக் கலாய்த்துள்ளனர்.

  சேவாக், ராகுல் காந்தி பேசும் படத்தை வெளியிட்டு, “கதம், பை.. பை.. டாடா குட் பை” என்று பதிவிட்டுள்ளார், வாசிம் ஜாஃபர் ஒரு படிமேலே போய் இருசக்கரவாகனத்தில் ஆப்கான், இந்தியா இரண்டையும் கழற்றி விட்டு நியூசிலாந்து வண்டியை எடுத்துச் செல்வது போல் மீம்பதிவிட்டுள்ளார்.

  விவிஎஸ் லஷமண் ஒரு ஜெண்டில்மேன் அவர் நியூசிலாந்து அணியை பாராட்டித்தள்ளி விட்டார், “நியூசிலாந்து பிரில்லியண்ட் பீல்டிங், சேசிங்கில் டாம்பீகம் இல்லாமல் சேஸ் செய்து வெற்றி.” என்று பாராட்டியுள்ளார்.

  முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான், “2022-ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பைக்காவது இன்னும் சிறப்பாகத் தயார் செய்து இந்தியா மீண்டெழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: T20 World Cup