சேவாக் vs அக்தர்.. யார் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் & எப்படி?

சேவாக் vs அக்தர்.. யார் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் & எப்படி?
சேவாக் - அக்தர்
  • Share this:
சேவாக்கிடம் இருக்கும் முடியை விட என்னிடம் பணம் அதிகம் என்று சோயப் அக்தர் கூறி உள்ளதால் வார்த்தை போர் வெடித்தள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றி கொள்ளும். இரு நாட்டு வீரர்களும் ஆக்ரேஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். மும்பைத் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் உடனான நேரடி போட்டியை இந்தியா தவிர்த்து வருகிறது. உலகக் கோப்பை, சாம்பியன் டிராஃபி போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும்.

அண்டை நாடு என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் குறித்து கருத்துகள் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அதிகமாக இந்திய அணி குறித்தும் வீரர்கள் குறித்தும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். தற்போது அவர் கூறிய கருத்தால் வார்த்தை போர் வெடித்துள்ளது.


சேவாக் 3 ஆண்டுகளுக்கு முன் பேசிய வீடியோவில் சோயப் அக்தர் பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசி வருகிறார் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில் அக்தர் “ஒருவரின் செல்வம் அவரால் தான் கிடைக்கிறது. இந்தியாவால் அல்ல. சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிகம் பணம் இருக்கிறது“ என்று கேலியாக கூறியள்ளார்.

சோயப் அக்தரின் கருத்தால் அவரை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

சேவாக் : இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் சேவாக் அதிரடியாக விளையாடி எதிரணியை திணறவிட்டவர். தற்போது கிரிக்கெட் போட்டியின் வர்ணணையாளராக உள்ளார். 2014 - 2018 வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்தார். சமூக வலைதளங்களில் இவரை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இன்ஸ்டகிராமில் 5 மில்லியன் பேர், ட்விட்டரில் 20.3 மில்லியன் பேர் இவரை பின்பற்றுகின்றனர்.மேலும் அடிதாஸ், ஜந்து பாம், ஜே.கே சிமெண்டஸ், பூஸ்ட், ஹீரோ, ராயல் சேலஜ் போன்ற நிறுவனத்திற்கு விளம்பர தூதராக உள்ளார். www.sehwagworld.com என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். அந்த பக்கத்திலும் ஏராளமான ஸ்பான்சர் உள்ளார்கள். இதன் மூலமாக வரும் பணத்திலிருந்து அவருடைய சொத்துமதிப்பு ரூ.284 கோடி என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

சோயப் அக்தர்: கிரிக்கெட் வரலாற்றில் அக்தர் வீசிய 161.3 கி.மீ வேகபந்து வீச்சு தான் இதுவரை சாதனையாக உள்ளது. 165 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 247 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ராவல்பண்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் இவர் செல்லமாக அழைக்கப்படுவார். இவருடைய நிகர சொத்துமதிப்பு ரூ.163 இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

அக்தரும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் சமூகவலை தளங்களிலும் இருக்கிறார். அக்தர் சில விளம்பர நிறுவனங்களுக்கு தூதராக உள்ளார். இவரிடம் விலை உயர்ந்த கார்கள் மற்றும் பைக்குள் உள்ளன.

அக்தர் - சேவாக் இடையேயான வார்தைப் போில் யார் வெல்வார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும் அதிக பணம் சம்பாதிப்பதில் இந்திய வீரர் சேவாக் வென்றுள்ளார் என்றே சொல்லலாம்.
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading