இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத வீரர்களில் ஒருவராக விளங்குபவர் வீரேந்தர் சேவாக். சேவாக் களத்தில் பேட்டுடன் நின்றாலே ஆட்டம் களைகட்டி விடும். அப்படிப்பட்ட அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன சேவாக்கிற்கு ஆர்யவீர் என்ற 15 வயது மகன் உள்ளார். சேவாக்கின் மகனும் கிரிக்கெட் வீரராக உருவாகி வரும் நிலையில், தற்போது டெல்லி 16 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், தனது மகன் ஆர்யவீர் ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் கடுமையாக உழைத்து வருவதாக சேவாக் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி டி20 திருவிழாவான ஐபிஎல் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதற்கான விழா மும்பையில் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய சேவாக், "இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் மாபெரும் தளமாக ஐபிஎல் விளங்குகிறது. இதுவே ஐபிஎல் தொடரின் மகத்தான வெற்றி. முன்பெல்லாம் ரஞ்சியில் நன்கு விளையாடும் பல வீரர்களின் திறமை வெளியே தெரியாமல் முடங்கி விடும். பல வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
View this post on Instagram
ஆனால், ஐபிஎல் வந்த பின்பு சிறிய சிறிய மாநிலங்களில் உள்ள பல இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளனர். எனது 15 வயது மகன் கூட ஐபிஎல் அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறான்" என சேவாக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. தற்போது, சேவாக்கும் தனது மகன் ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL, Virender sehwag