பும்ராவிற்கு நடந்த அதே நிகழ்வு நடராஜனுக்கும்... அசரவைக்கும் ஷேவாக்கின் புள்ளிவிவரம்

பும்ராவிற்கு நடந்த அதே நிகழ்வு நடராஜனுக்கும்... அசரவைக்கும் ஷேவாக்கின் புள்ளிவிவரம்

பும்ரா - நடராஜன்

Jasprit Bumrah | T Natarajan | நட்சத்திர பவுலர் பும்ரா அணியில் இல்லாத நிலையிலும் நடராஜன் வேகம் பும்ராவின் இடத்தை நிரப்பியது.

 • Share this:
  இந்திய அணியில் முக்கிய பந்துவீச்சாளராக மாறிவரும் நடராஜனுக்கும் பும்ராவிற்கும் உள்ள ஒற்றுமைகளை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் பட்டியலிட்டுள்ளார்.

  ஐ.பி.எல் 2020 தொடரில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையம் தன்பக்கம் ஈர்த்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒரு நாள் தொடரில் கடைசி போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனது அறிமுக போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.

  அதை தொடர்ந்து தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் பந்துவீசிய நடராஜன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். நட்சத்திர பவுலர் பும்ரா அணியில் இல்லாத நிலையிலும் நடராஜன் வேகம் பும்ராவின் இடத்தை நிரப்பியது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக பும்ரா தற்போது மாறி வருகிறார்.

  இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் அறிமுக போட்டிகளில் பும்ரா - நடராஜன் இருவரக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியிலிட்டுள்ளார். அந்த புள்ளிவிவரம் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

  அதில், பும்ரா - நடராஜன்

  -இருவரும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரர்களாக அணியில் இடம் பெற்றவர்கள்.

  -இருவரும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானவர்கள்.

  -இருவரும் ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் அறிமுகமானவர்கள்.

  -இருவரும் அறிமுகமான கடைசி ஒரு நாள் போட்டியே அந்த தொடரில் இந்திய அணிக்கு வெற்றியாக அமைந்தது.

  -இருவரும் அறிமுகமான ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.  -இருவரும் அறிமுகமான டி20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தினர்

  என்று ஷேவாக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: