உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணியில் ஒரு ஸ்பின் பவுலர் கூட இல்லாதது ஏமாற்றமளிப்பதாக ஆஸ்திரேலிய ஸ்பின் லெஜண்ட் பதிவிட்டதற்கு பதிலளித்த ஒரு இணையவாசி ‘வார்ன் உங்களுக்கு ஸ்பின் எப்படி ஒர்க் செய்யும் என்று தெரியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து இந்த வாசகரின் மொக்கைக்கு மேலும் பல மொக்கை நெட்டிசன்கள் வந்து ஆமோதிப்பாக வார்னை கேலி செய்ய. சேவாக் இவர்களைக் கேலி செய்யும் விதமாக, “அதானே, இவரது கேள்வியை ஃப்ரேம் செயுது கொள்ளுங்கள் வார்ன். ஸ்பின்னை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்” என்று சிரிப்பு இமோஜியைப் போட்டு அந்த நெட்டிசனைக் கிண்டல் செய்துள்ளார்.
ஷேன் வார்ன் தன் ட்விட்டர் பதிவில், “ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதியில் நியூசிலாந்து ஒரு ஸ்பின்னரை அணியில் சேர்க்காதது ஏமாற்றமளிக்கிறது. பவுலர்களின் காலடித்தடங்கள் பெரிய அளவில் பிட்சில் தெரிவதால் இந்தப் பிட்ச் ஸ்பின் ஆகும் வாய்ப்புள்ளது. அப்படி ஸ்பின் எடுக்கும் பட்சத்தில் இந்தியா 275/300 ரன்கள் எடுக்குமேயானால் வானிலை தொல்லை தரும் முன்பே டெஸ்ட் முடிந்து விடும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு மக்கா என்ற ஒரு நெட்டிசன், “ஷேன் உங்களுக்கு ஸ்பின் எப்படி ஒர்க் செய்யும் என்று தெரியுமா? பிட்ச் வறண்டிருக்க வேண்டும் இங்கோ மழை பெய்கிறது” என்று பதிலளிக்க.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஷேன் வார்ன் என்ன சொல்கிறார் என்பது புரியாத மற்ற நெட்டிசன்களும் மவுட்டிகக் கூக்குரலில் இணைந்து வார்னை கலாய்க்க, சேவாக் இவர்களைக் கலாய்க்குமாறு சிரிப்பு இமோஜியுடன், அதானே ஷேன் வார்ன் கொஞ்சம் ஸ்பின் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று கலாய்த்துள்ளார்.
Also Read: இது என்ன உங்கள் இஷ்டத்துக்கு அடித்துத் துவைக்கும் இந்திய ஆட்டக்களமா ரிஷப் பந்த்?- லஷ்மண் அறிவுரை
பந்துகள் திரும்பவே திரும்பாது என்ற பிட்ச்களிலும் ஷேன் வார்ன் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ள மிகப்பெரிய ஸ்பின் மேதை, அவரைப் போய் ஸ்பின் தெரியுமா என்றால், கையில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகம் கிடைத்தால் போதும் எந்த ஒரு முட்டாளும் தனக்கு தெரிந்ததாக எந்த ஒரு கருத்தையும் பதிவிடலாம் என்பதற்கு பல உதாரணங்களில் இதுவும் ஒன்று.
ஏனெனில் இங்கிலாந்தில் எத்தனை டெஸ்ட்களை ஆடியிருப்பார் ஷேன் வார்ன், எத்தனை கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியிருப்பார், சவுத்தாம்ப்டன் மண்ணை அளந்திருப்பார், அவரிடம் போய் இப்படி ஒரு கேள்வி கேட்ட நெட்டிசனை சேவாக் பாணியில் அல்லாமல் இன்னும் தீவிரமாக கலாய்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.