சிட்னி டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டம் இப்படி ஆகும் என்று பாவம் ஆஸ்திரேலியா நினைத்துக் கூட பார்க்கவில்லை. 4 நாள் ஆட்டம் ஆதிக்கம் செலுத்தி விட்டு கடைசி தினம் இந்தியா டெஸ்ட்டை டிரா செய்யும் என்று அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
1980களின் மே.இ.தீவுகள் போல் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகள், எதிரணி வீரர்களின் தலையை, விரல்களை, முழங்கைகளை, நெஞ்சை பதம் பார்க்கும் வெறிகொண்ட பவுலிங்கை வீசி ‘வேதநாயகம்னா பயம்’ என்பது போல் ஆஸ்திரேலியான்னா பயம்’ என்று மிரட்டிப்பார்த்தார்கள்.
ஜடேஜாவை காயப்படுத்தி வெளியேற்றினார்கள், ரிஷப் பந்த்தை முழங்கையில் காயப்படுத்தினார்கள், ஆனால் கடும் வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டு அவர் ஒரு டவுன் முன்னால் இறங்கி சாத்து சாத்தென்று சாத்தினார்.
அவரது அசாத்திய தைரியத்தைப் பொறுக்க மாட்டாத ஸ்மித் ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது அவர் கிரீசருகே வந்து அவர் எடுத்திருந்த கார்டை சிதைத்து வேறு ஒரு கோடை போட்டு விட்டுப் போனார். இந்தச் சில்லரைத்தனமான விஷயங்கள் உடனடியாக வீடியோவில் அம்பலமாகி விடுகின்றன, இது ஸ்மித்த்திற்குத் தெரிவதில்லை.
அஸ்வினிடம் போய் டிம் பெய்ன், உன்னை பிரிஸ்பனில் பார்க்கிறேன் என்கிறார், என்னை என் அணியில் பிடிக்கும் ஆனால் உன்னை உன் அணியில் யாருக்கும் பிடிக்காது என்று அபத்தமாக அஸ்வினிடம் கூறினார் அஸ்வின் ‘பேசாமல் இருக்கிறாயா அல்லது பேட்டிங் செய்யாமல் இருக்கட்டுமா?” என்று கூறினார். இப்படி பின்னால் நின்று கொண்டு விக்கெட் கீப்பிங் செய்யாமல் லொடலொடவென ஏதாவது உளறிக்கொட்டி 3 கேட்ச்களை விட்டதுதான் மிச்சம். கடைசியில் ட்ரா ஆனதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
போட்டியை நெருக்கமாகப் பார்த்து வரும் முன்னாள் அதிரடி மன்னன் சேவாக் அவ்வப்போது ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
இதில் இன்று ஆஸ்திரேலிய அணியினரின் சேட்டைகள் பற்றி அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பந்த்தின் பேட்டிங் கார்டு அடையாளங்களை அகற்றியது முதல் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்திப் பார்த்தனர். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை” என்று கேலி செய்ததோடு, இந்தியில் பிரபலான ஒரு சொல்லாக்கத்தையும் பகிர்ந்துள்ளார், அதாவது நாம இங்கு சொல்கிறோமே ‘தண்ணி குடிக்க வச்சுட்டாங்க’ என்று அதே போல் சாப்பிடவும் முடியல்ல, குடிக்கவும் முடியல்ல, தம்ளர் உடைஞ்சதுதான் மிச்சம்’ என்ற பொருளில் ஆஸி.யை கிண்டல் செய்தார் சேவாக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia, Rishabh pant, Steve Smith, Twitter, Virender sehwag