Home /News /sports /

Video: சென்னை-28 பிரேம்ஜியை போல பேட்டை தரமறுத்து அடம்பிடித்த விராட் கோலி

Video: சென்னை-28 பிரேம்ஜியை போல பேட்டை தரமறுத்து அடம்பிடித்த விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

குழந்தைகளுடன் விராட் கோலி கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நாளை இந்தோரில் நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு டி 20 தொடரில் ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்துகிறார். அதற்காக இந்தோர் சென்றுள்ள விராட் கோலி புதிய விளம்பர ஷூட்டிங் ஒன்றிலும் பங்கேற்றுள்ளார் . அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார் விராட் கோலி. முதலில் பந்து வீசிய விராட் கோலி பின்னர் குழந்தைகளின் பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் சென்னை-28 பிரேம்ஜியைப்போல பேட்டை வைத்துக்கொண்டு தரமறுத்து அடம்பிடித்துள்ளார் கோலி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Published by:Prabhu Venkat
First published:

Tags: Captain Virat Kohli

அடுத்த செய்தி