விராட் போல் நடித்த ஜடேஜா.. தடுமாறி கண்டுபிடித்த ரோஹித்... பார்த்து ரசித்த கோலி - வைரல் வீடியோ

Vijay R | news18
Updated: August 9, 2019, 9:25 PM IST
விராட் போல் நடித்த ஜடேஜா.. தடுமாறி கண்டுபிடித்த ரோஹித்... பார்த்து ரசித்த கோலி - வைரல் வீடியோ
Image - Twitter
Vijay R | news18
Updated: August 9, 2019, 9:25 PM IST
ஓய்வு நேரத்தில் ரவீந்திர ஜடேஜா, ரோஹித் சர்மா செய்யும் அட்டகாசங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஓய்வு அறையில் வீரர்களின் மனநிலைதான் போட்டியின் வெற்றியை உறுதி செய்யுமென்று விராட் கோலி கூறியிருந்தார். அதுபோன்ற ஓய்வு நேரங்களில் இந்திய வீரர்கள் செய்யும் குறும்புதனமான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் ரோஹித் சர்மாவும், ரவிந்திர ஜடஜோவும் ‘ஹெட்ஸ் அப்' (Heads up) என்னும் விளையாட்டை விளையாடுகிறார்கள். ஜடேஜா அட்டையில் உள்ள வீரரை போல் நடித்து காட்டுகிறார். அதனை ரோஹித் சர்மா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே அந்த வீடியோ.

முதலில் பும்ராவின் பெயர் வர அதை ஜடேஜா எளிதாக நடித்து காட்ட அதனை உடனே ரோஹித் கண்டுபிடித்து விடுகிறார்.

அடுத்ததாக விராட் கோலி பெயர் அட்டையில் வருகிறது. அதனை ஜடேஜா நடித்து காட்டுகிறார். ஆரம்பத்தில் ரோஹித் சர்மா கண்டுபிடிக்க முடியாமல் திணறினாலும் இறுதியாக கண்டுபிடித்து விடுகிறார். இதனை இவர்களுக்கு  எதிரே உட்கார்ந்து இருக்கும் கேப்டன் விராட் கோலி சிரித்து கொண்டே ரசிக்கிறார்.உலகக் கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி - ரோஹித் சர்மான இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, இந்த விவகாரத்தில் யார் லாபம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி தெரிவித்திருந்தார்.

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை இந்தியா கைப்பற்றியது. ஒரு நாள் தொடரில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Also Read : டி.என்.பி.எல் தொடரில் தகுதி சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள்!

Also Read : Fact Check : காஷ்மீரில் தோனிக்கு எதிராக கோஷமிடப்பட்டதா?

Also Read : ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி! ஐசிசி அதிரடி

Also Read : ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!

Also Read : அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்
First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...