#INDvsNZ | கடந்த 5 வருடங்களில் விராட் கோலியின் மோசமான தொடர்... ரசிகர்கள் சோகம்...!

#INDvsNZ | கடந்த 5 வருடங்களில் விராட் கோலியின் மோசமான தொடர்... ரசிகர்கள் சோகம்...!
INDvsNZ
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 3 ஒரு நாள் போட்டிகளையும் சேர்த்து விராட் கோலி மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் 5-0 என வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதே உத்வேகத்துடன் ஒரு நாள் தொடரையும் வென்று சாதனை பயணத்தை தொடர்வார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது இந்திய அணி.

முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரையும் இழந்தது இந்திய அணி. 3வது ஒரு நாள் போட்டி பே ஓவல் மைாதனத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 296 ரன்கள் எடுத்துள்ளது. ரன்மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்த மொத்தமாக 75(51, 15 & 9) ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.


இதன் மூலம் இந்த தொடரில் விராட் கோலியின் சராசரி 25 தான். கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலியின் குறைவான சராசரி இதுவே ஆகும். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2009 - 10 ஒரு நாள் தொடரில் 2 போட்டிகளில் 40 ரன்கள் அடித்து 20 சராசரி வைத்திருந்தார். விராட் கோலியின் மோசமான ஆட்டம் ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading